
பச்சைக்கு காத்திருக்கும்
கண நேரத்தில்
முன் சென்ற சீருந்தின்
பின்புற கண்ணாடியில்
ஒரு யானையும் ஒட்டகச்சிவிங்கியும்
முகவாயும் கண்களும் காதும் மட்டும்
கருமை பூசிய நாய்க்குட்டியும்
தத்தம் பாவனையில் வெளியுலகை
நோட்டமிட்ட வண்ணமிருந்தது
காத்திருப்பின் நொடிகள்
ஒடிய ஒடிய ஒரு கணம்
வேகமெடுத்த முன்வண்டியில்
அவை மூன்றும்
எந்த மழலைப் பிரியத்தை
வீட்டோடு விட்டு வந்ததோ
ஏக்கங்களையும் கண்ணில் பதுக்கி
முன் செல்லும் வண்டியை
வீடு நோக்கி
பின்னே இழுத்துக் கொண்டிருந்தது
20 comments:
அருமை... ஒரு நிகழ்வு கண் முன் விரிகிறது :)
கடைசி வரிகளுக்கு முன்னால்வரை அதுவொரு கவனத்தை ஈர்க்கும் காட்சியின் பதிவுதான். ஆனால், கடைசிவரிதான் கவிஞரின் வெளிப்பாடு.வெகுவாக ரசிக்கமுடிகிற கவிதை.
ரொம்ப நாள் கழித்து திருப்தியான கவிதை உங்கள் தளத்தில் . ஒரு சொல் எடுத்தாலும் கலைந்து விடும் கச்சிதத்துடன் :)
பொம்மைகளின்
பிரியமா ஏக்கமா வரிகளில் !
ரொம்ப நல்லா இருக்குங்க...அதுவும் கடைசி நாலு வரிகள் மிக ஈர்க்கிறது.
லாவண்யா,
அருமையான கவிதை லாவண்யா... முத்துவேல் சொன்னது மாதிரி... கவிதை மொத்தமும்... கடைசி வரியில்.
அன்புடன்
ராகவன்
காட்சியை கண்முன் நிறுத்தும் நற்கவிதை. பகிர்வுக்கு நன்றி.
அழகான கவிதை.
அழகான ப்ரியங்கள் வரிகளில்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
நல்ல கவிதை-
ரொம்ப நல்லா இருக்குங்க...
லாவண்யா, முத்துவேலை வழிமொழிகிறேன். கடைசி வரிகள் அருமை..! தொடருங்கள்.
எத்தனை முறை பார்த்திருக்கிறேன்.
மிக அழகாய் மென்சோகத்துடன் சொல்ல முடிந்த உங்களுக்கு
வாழ்த்துகளும் நன்றியும்
உங்கள் தமிழ்த் திமிருக்கு தலை
வணங்குகிறேன்.
விடுபட்டு போயிருந்த கவிதைகள் எல்லாம் வாசித்தேன் சகோ.
செம்ம ஃபாரம் போல,
மழை நனைக்கவியலாத நதியோர மணல் போல!
அட்டகாசமான கற்பனை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
அருமையான கவிதை,கவிதை போலும் இல்லை,கவிதை தான்.
கௌரி, முத்துவேல், நேசமித்திரன், ஹேமா, கலாநேசன், ராகவன், வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி, அஹமது இர்ஷாத், வைகறை, பொன்.வாசுதேவன், சே.குமார், சந்துரு, வேல் கண்ணன், சிவ குமாரன், பா.ரா அண்ணா, விஜய், ஆசியா ஒமர் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நெகிழ்வான உணர்வை வார்த்தைகளில் நேர்த்தியாக வடித்திருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்....
Post a Comment