Sunday, March 20, 2011

சந்தேகம்


சிற்றெறும்புக் கூட்டத்தின்
இரைக்கான அலைச்சலில்
எப்போதும் எறும்பாக
இருந்தில்லையிவள்

உண்மை விளம்புதலை தவிர
சாயம் பூசிய நாடகத்தின்
எந்த கதாபத்திரமும்
இவளது எதுவுமில்லை

இருப்பினும்
மென்பாசிக் குளத்தில்
கேள்விக் குறியென
மிதக்கும் வாத்திடமும்
இருக்கக்கூடும்
இவளை பற்றிய சந்தேகங்கள்

5 comments:

தமிழ்வாசி - பிரகாஷ் said...

நல்ல பகிர்வு....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

சே.குமார் said...

அருமை... அருமை...

rajasundararajan said...

'மென்பாசிக் குளம்' இறைச்சி அணியாக அமைந்து, இக் கவிதையைச் சங்கப் பாக்களுக்கு நிகர்நிமிர்த்தி, ஒரு தோழி கூற்றாகவோ அல்லது தலைவி கூற்றாகவோ உணரத் தருகிறது. வாழ்க!

vasan said...

/இருப்பினும்
மென்பாசிக் குளத்தில்
கேள்விக் குறியென
மிதக்கும் வாத்திடமும்
இருக்கக்கூடும்
இவளை பற்றிய சந்தேகங்கள்/

எப்ப‌டி, இப்ப‌வும்.. இப்ப‌டி? என்ற‌ சந்தேகக் கேள்வியோ!!

உயிரோடை said...

நன்றி தமிழ்வாசி - பிரகாஷ்.

நன்றி சே.குமார்.

நன்றி ராஜசுந்தரராஜன். மென்பாசி குளம் ஒரு சங்கப்பாடலிருந்து கொணரப்பட்ட படிமமே. பாசி குளம் போன்றது மனம். பாசி குளம் போன்றது சமூகம். :)

மிக்க நன்றி வாசன்.