Friday, April 8, 2011

காதல் காட்சி

பூனைநடை நடக்கிறது புறா
சீனப்பெண்ணின் கைவிசிறி போன்ற
சிறகு விரித்துப் பறக்கிறது
இரைக்கென அரிசியைக் கொத்தித் தின்கிறது
மாட இடுக்குகளில்
அக்கும்பக்குமென காதலோடு
ஜோடியின் அலகுகளைக் கோர்க்கிறது

வறண்ட நாவைத் தணிக்க
விரைந்து இறுகப் பற்றிய பிடியால்
தளும்பிய குவளைநீர் சிதறி
அதீத காதல் காட்சியொன்றை
வரைந்திருக்கிறது

புறாக் கொஞ்சலில்
நீர்ச்சித்திரத்தில் கரைந்த நான்
தவறி விழுந்த பூத்தொட்டியென
தரையில் உடைந்து கிடக்கிறேன்

3 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

கதிர்பாரதி said...

நன்று....

உயிரோடை said...

ராம லஷ்மி, கதிர்பாரதி நல்லது நன்றியும் கூட