Sunday, April 17, 2011

வாழ்க்கைச் சக்கரம்


சிறு பஞ்சின்
எளிமையை ஊதி ஊதி
மலைபாரமென
வனைந்து வைக்க
வலியுறுத்தபடுகிறேன்

கீழ்படிந்தோர் தலைநிமிர விடாதிருக்க
தினத்தின் பெரும்பகுதியை
செலவளிக்க நிர்பந்திக்கபடுகிறேன்

மேல்படிக்கட்டின் மேலேயே
இருக்கிறது கவனம்
முன்னேறி செல்ல
பிறர் தடை கொஞ்சமும்
இருக்கவே செய்கிறது

மனச்சக்கரத்தை
சாந்தி செய்ய
எல்லா சித்து வேலையும்
செய்யத் தானே வேண்டிருயிருக்கிறது

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு கவிதை....

தமிழ்வாசி - Prakash said...

சூப்பர் கவித

உயிரோடை said...

நன்றி ராமலஷ்மி.

நன்றி நாஞ்சில் மனோ

நன்றி தமிழ்வாசி