Thursday, April 28, 2011

வார இறுதி

புலர்காலை புதுக்காற்றோடு பண்பலையில்
ஸ்ரேயா கோசலின் இன்குரல்
மாங்கனி சாராக காதில்
இறங்கிக் கொண்டிருந்தது

வசந்தத்தை தானே உண‌ர்ந்து மலரும்
கைவிரல்களென கொத்தாக பூத்திருந்த
மனமயக்கும் குளிர்சிவப்புப் பூக்கள்
விழித்திரையில் அசைந்தாடி நடனமிட்டன

மின்சார கம்பிகளின்
இசைக்குறியீடுகளென அமர்ந்திருக்கும்
காக்கைகள்
எங்கோ இசைக்கப்படும்
பியானோவுக்கு பொத்தானாகி இசைப்பரப்பின

நெடுஞ்சாலையில் வட்டச்சுற்றில்
நிறைமாத கர்பிணியின் வயிறென‌
சரிந்து அமர்ந்திருந்த
நடுக்கல்லை நனைத்துக் கொண்டிருந்தது
சுழன்றாடும் சுகந்த நீரூற்று

வார இறுதி இனிதே தொடங்கியது
கூடவே
நேற்றடித்த புயலால்
முறிந்து போன மரக்கிளை
எப்போது எடுத்து ஏறிப்படுவோமோ
என்ற பயத்துடன்
அடுத்த கிளை மேல் சாய்ந்து
ஊசலாடிக் கொண்டிருந்தது

7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மின்சாரக்கம்பியின் இசைக்குறியீடுகளாக காக்கைகள் அழகான கற்பனை..:)

Nundhaa said...

எழுதி எழுதி ஒரு வித romanticism உங்கள் கவிதைகளில் தென்படுவதை கவனிக்கிறேன் முழுவதும் பிடிக்கவில்லையெனினும்

‘நிறைமாத கற்பிணியின் வயயென’ - எழுத்துப் பிழை? பரவாயில்லை ...

:)

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

///மின்சார கம்பிகளின்
இசைக்குறியீடுகளென அமர்ந்திருக்கும்
காக்கைகள்
எங்கோ இசைக்கப்படும்
பியானோவுக்கு பொத்தானாகி இசைப்பரப்பின
//////

எதார்த்தக் கற்பனை அருமை

கலாநேசன் said...

நல்கவிதை. உவமைகள் ரசித்தேன். "பண்பலை" சரிசெய்யுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

உவமைகள் அழகு. நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி சகோ...

அகநாழிகை said...

ம்ம் வழக்கமா எழுதற கவிதைகளில் இருந்து கொஞ்சம் வடிவம் மாறியிருக்கு.
நல்லாயிருக்கு லாவண்யா.

உயிரோடை said...

நன்றி முத்துலெட்சுமி

நன்றி நந்தா. பிழை சுட்டியமைக்கு கூடுதல் நன்றியும் கூட.

நன்றி பனித்துளி சங்கர்.

நன்றி கலாநேசன். திருத்திட்டேன் நன்றி.

நன்றி வெங்கட் நாகராஜ்.

நன்றி அகநாழிகை வாசுதேவன்.