
பூங்காவின் மத்தியில் நிற்கும் இதுவே
உலகின் மிகப் பெரிய மதுக்குவளையாக இருக்கலாம்
மதுவைச் சுகிக்கும் கண்களுக்கும்
பிற பார்வைகளுக்கும்
வெற்வேறொன்றாக இக்கோப்பை தோன்றலாம்
காய்ந்த நுரையாக
பறவைகளின் எச்சம்
கிண்ணத்தின் விளிம்பிலிருந்து
எப்போதும் வழிந்து கொண்டிருக்கிறது
எந்த போதையையும்
நிரப்பித் தரவியலாத இக்கிண்ணம்
சிலபோது
பெய்யும் மழையேந்தி
தனக்குத்தானே நுரைத்துப் பொங்கி
நிரம்பி வழிகிறது
11 comments:
அருமை அக்கா..
எந்த போதையையும்
நிரப்பித் தரவியலாத இக்கிண்ணம்
சிலபோது
பெய்யும் மழையேந்தி
தனக்குத்தானே நுரைத்துப் பொங்கி
நிரம்பி வழிகிறது
அழகான ஆக்கம்.பாராட்டுக்கள்>.
thamizth thimirp pitiththaval veeram koppalikkum vithaiyin velicham ..kavithaikku vaazththukkal
blogs heading arumai ,kavithai inimai
அருமை.
மழை நீரையும் மதுவாக்கும் பொக்கிச கின்னம்தான். பூங்காக்களில் வாழும் பறவைகளுக்கெல்லாம் மது ஊறும் அமுத சுரபியாகவும்...
கௌரி நன்றிம்மா.
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி தூரிகை.
நன்றி ஆதி.
நன்றி ந.பெரியசாமி.
//பூங்காவின் மத்தியில் நிற்கும் இதுவே
உலகின் மிகப் பெரிய மதுக்குவளையாக இருக்கலாம்
//
இப்படத்திலுள்ளது மதுக் குவளையல்ல.
இது தேநீர் அல்லது கோப்பி அருந்தும் குவளையே! அத்துடன் கரண்டியும் அருகேயுள்ளது.
மது அருந்தக் குவளையுடன் கரண்டி தேவையில்லை.
விஸ்க்கி, வைன் போன்றவை அருந்தும் குவளைகளுக்குக் கைபிடியில்லை. பியர் குவளைக்கே கைபிடியுண்டு.
ஆனால் அவை எதுவுமே இந்த உருவிலில்லை.
கவிதை பற்றி ஏதும் அறியேன்.
:-)
அருமையா இருக்கு.ஒரே ஒரு சந்தேகம்.சல்லடைக் கிண்ணத்தில் சுகிக்கும் மது ?.எங்கனம் ..வாழ்த்துக்கள்
"காய்ந்த நுரையாக
பறவைகளின் எச்சம்"
Post a Comment