
நீல இசை
கழன்று எரிகிறது
இசையின் வெம்மை
இதமாய் பரவுகிறது
மேடு பள்ளமெங்கும்
நிறைகிறது
எல்லா மரமும்
வெளியேற்றிய
இசையின் நீலம்
ஆசைக் கடல்
வெண்மையாய் பொங்க
அதில் இசையின் ஊதா
அலை அலையாய்
கால் நனைக்கிறது
போகும் வழிப்பாதையெங்கும்
கம்பள உதாவை
விரித்து இசை
பரவிக் கிடந்தது
நீலக்குயில் பறக்கும்
வானமெங்கும் நீக்கமற
மிதக்கிறது இசை நீலமாய்
இசையின் நிறமா
இசைந்த மனமா
நீல வண்ணத்தோடு
மோனவெளியில் நீந்தி கொண்டிருக்கிறது
இசையும் நீலமும்
சில சமயம்
மனச்சிதைவை மீட்டெடுக்க வல்லது
2 comments:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் கவிதை...
நீல இசை - நல்ல இசை...
வாழ்த்துகள்....
இசையின் வண்ணம்!
சிறந்த புனைவு.
Post a Comment