Sunday, April 7, 2013

குடைக்கம்பி உடைத்த மௌனம்
















மௌனத்தின் ஆழ்கடல்
நிறைந்திருந்தது மனவெளியெங்கும்
நிறை நிம்மதி ஆழ் அமைதி
விளைவாய்
வறண்ட கவி மௌனத்தை
பூண்டதென் எழுதுகோல்

ஏங்கி கலைத்த
விழிகள் மீதும்
இரக்கம் கொள்ளவில்லை
என் எழுதும் பேனா

இடி மின்னலோடு கூடிய
ஒரு தேவதினத்தில்
மிகுமழைக்கு பின்னால்
குடைக் கம்பியொன்று
மழலை வாய்விடுத்த
முலைக் காம்பாய்
உதிர்த்துக் கொண்டிருந்த
நீர்ச்சொட்டுகள்
கலைத்தெறிந்தது
கொடும் அமைதியை

பூரித்த கவிதைகளை
எழுதும் கவிக்கோலை
நான்
கை பற்ற கூடும்
வெகு விரைவில்

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

எழுதுகோலைக் கைப்பற்றி விட்டதற்கு
இந்தக் கவிதையே அத்தாட்சி
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Sugirtha said...

//மிகுமழைக்கு பின்னால்
குடைக் கம்பியொன்று
மழலை வாய்விடுத்த
முலைகாம்பாய்
உதிர்த்து கொண்டிருந்த
நீர்ச்சொட்டுகள்//

ரொம்ப நல்லா இருக்கு லாவண்யா இந்த வரிகள்...

உயிரோடை said...

நன்றி திண்டுக்கல் தன்பாலன், ரமணி , சுகிர்தா

இராய செல்லப்பா said...

நல்ல கவிதை.

'பரிவை' சே.குமார் said...

அருமை...

அகநாழிகை said...

//இடி மின்னலோடு கூடிய ஒரு தேவதினத்தில் மிகுமழைக்கு பின்னால் குடைக் கம்பியொன்று மழலை வாய்விடுத்த முலைக் காம்பாய் உதிர்த்துக் கொண்டிருந்த நீர்ச்சொட்டுகள் கலைத்தெறிந்தது கொடும் அமைதியை /

அருமை

இரவுப்பறவை said...

கவிதை அழகு, இந்த வரிகளை வெளிக்கொணரும் மன நிலையை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தேன் இயலாமையின் வெளிப்படாய் இருக்கிறதெனக்கு இக்கவிதை
//குடைக் கம்பியொன்று// கம்பியொன்றில் என வாசித்துக்கொள்கிறேன்..
இப்படி ஒவ்வொரு நொடியும் எதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அதை கவனிப்பதற்கும் அதிலிருக்கும் கவிதையை புரிந்து கொள்வதற்கும் மனதுதான் வாய்ப்பதில்லை

உயிரோடை said...

நன்றி செல்லப்பா. நன்றி குமார். நன்றி வாசுதேவன். நன்றி இரவு பறவை