Friday, September 24, 2010

க‌ல்யாண்ஜி க‌விதைக‌ள்

1. நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது


2.தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

3.அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.

4.பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்
அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
'கோலம் நல்லா வந்த '
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.

புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ

விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.

உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.

- கல்யாண்ஜி

4 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல இரசனையுடன் இருக்கும் நீங்கள்

ஏன் கவிதையெழுத முயற்சிக்க கூடாது

உயிரோடை said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரை ஜமால்.

என்னுடைய வலைப்பூவில் பதிவின் பிரிவுகள் என்ற பகுதியில் கவிதைகள் என்ற சுட்டியை சுட்டி நான் எழுதிய சிந்தனைகளை(ஒரு வேளை நீங்கள் அதை கவிதை என்றும் கூறலாம்) பார்க்கலாம்

Anonymous said...

1. why poet see the pictures in water than real lover. but water is not unmoving anytime like TIME. So poet like to catch the stop of dialectics. but figure have only two dimension and kalyanji have one dimension.

2. it is romantic. expectation of uman being is differ. but if it is based on scientifically why you disappoint for non-coming of letters.

3. lost of your village is the reactionary type only...

4. shadow of human on 12 noon,,, what kalyaangi..in physics two eq. oppsite reactions make the non-moving matters paa.

புதிய பரிதி said...

நல்ல கவிதை... பகிற்தலுக்கு நன்றி...