Friday, June 30, 2017

“நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்”


ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழியாக்க நூலுக்கு எனது மதிப்புரை கபாடபுரம் இதழ் நான்கில்

கட்டுரையிலிருந்து

//நமது பக்தி இலக்கியத்தில், ஆண்டாள், அக்கமகாதேவி, லல்லேஸ்வரி, மீரா, காரைக்கால் அம்மையார் ஆகியோர், கடவுள் மேல் கொண்ட பக்தியை காதலாய், தீவிரத் தேடலாய், சங்கமத்திற்கு இட்டு செல்லும் ஊடகமாய், தங்களது கவிதைகளைக் கையாண்டிருக்கின்றனர்.  மீரா, காரைக்கால் அம்மையார் தவிர, மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பெண்களும் தமது உடல், அதன் கூடல் ஆகியன, இறையன்பைப் பெற்று தரவல்லது என்று நம்பினார்கள், அவர்கள் அனைவர்க்கும் கடவுள் எதிர்பாலினன். அதையே தன் பாடல்களில் பதிவு செய்தார்கள். இவர்கள் அனைவரிலிருந்தும், ரூமி வேறுபடுவது, தன்னை ஆண் என்றோ, பெண் அன்றோ, ரூமி எங்கும் நிறுவிக் கொள்ளவில்லை என்பது தான். ரூமியின் சில கவிதைகளில், இறையை பெண்ணாகவும் தன்னை ஆணாகவும் (“கடல் உன்னிடம் / காதல் கொண்டு வரும்போது”), அதே கவிதையில் தன்னைப் பெண்ணாகவும் (“முழு நிறை ராஜாளி ஒன்று / எக்காரணமும் இன்றி / உனது தோளில் / வந்தமர்கிறது / உனதே உனதாக”) இறையை ஆணாவும், வேறு ஒரு கவிதையில் தாமிருவரும்  மானிட காதலர், எப்போதும் இறையன்பை நோக்கி பயணப்படுபவர் என்பது போலவும்  (“மீன்களை போல நம்மையும் / பெருங்கடல் அல்லவா சூழ்ந்திருக்க வேண்டும்”), இறையும் தானும் வெவ்வேறானவர் இல்லை என்றும், பல்வேறு விதமாகப் புனைந்திருக்கிறார். //

முழுக் கட்டுரையும் வாசிக்க

இங்கே சொடுக்கவும்




No comments: