Sunday, January 24, 2010

ஐந்திணை ஐம்பதில் ரசனையும், உவமையும்

ஐந்திணை ஐம்ப‌தில் ர‌ச‌னையும், நாட்டின் வ‌ள‌மையும், கூர்ந்த‌ உவ‌மைக‌ளும் நிர‌ம்பிக் கிட‌க்கின்ற‌ன‌.
அவ‌ற்றில் சில‌ இங்கே.
crown "கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு"
அழ‌கிய‌ சிறு நாரையின் (கொக்கின்) குத்துக்கு அஞ்சி, வாளை மீன்க‌ள் நீல‌ ம‌ல‌ர்க‌ளிட‌ம் ம‌றைந்து விளையாடும் வ‌ள‌மை மிக்க‌ ஊரில் வாழ்ப‌வ‌னுக்கு.... ர‌ச‌னை வ‌ள‌மை அறிவு....
000
lotus1

"அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்"
அவிழ்ந்து ம‌ல‌ர்ந்த‌ தாமரை பார்க்க‌ நெருப்பினை போல‌ இருக்கும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ மல‌ர்ந்த‌ தாம‌ரை நிறைந்த‌ வ‌ய‌ல்க‌ளை கொண்ட‌ ஊரில் வாழ்ப‌வ‌ன்.....
உவ‌மை அறிவு கூட‌வே நாட்டின் வ‌ள‌மை...

000
river sand "நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து"
ஆற்றின் நுண் ம‌ண‌ல் போல் நுட்பமாக‌ இணைந்திருந்த‌ ஐவ‌கைக் கூந்த‌ல், வெண் க‌ற்றாழை போல‌ நிற‌ம் மாறி போன‌து....
ஆஹா என்னே உவ‌மை என்னே ப‌ருவ‌ம‌ற்ற‌த்தை உண‌ர்த்தும் அறிவு...
000
tiger1 "உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப"
உதிர‌த்தைத் தோய்ந்த‌ வேங்கையின் ந‌க‌ம் போல‌ சிவ‌ந்து அரும்பி இருக்கும் முருங்கை ம‌ல‌ர்க‌ள்...
என்ன‌ நுணுக்க‌மான‌ நுட்ப‌மான‌ நோக்குத‌ல் வித்தியாச‌மான‌ உவ‌மை...
வீர‌த்தை உண‌ர்த்தும் உவ‌மை...
000
lizard1 "பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை
வரிப் புற வார் மணல்மேல் ஏறி"
சினைப்ப‌ல்லி பொரிந்த‌ முட்டைகளையொத்த புன்னை ம‌ல‌ர்க‌ள் இரைந்து கிட‌க்கும் ம‌ண‌ல்மேட்டில் மேலேறி...
இதுவும் மிக‌ வித்தியாச‌மான‌ ஒப்பீடு...
மேலும் நுட்ப‌மான‌ நோக்குத‌லுக்கு ம‌ற்றுமொரு எடுத்துக்காட்டு.
000
beach11 "எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப !"
அலை மோதி மோதி எழுந்த‌ ம‌ண‌ல் மேல், அவை கொண்டு வ‌ந்த‌ முத்துக‌ள் நின்று இமைப்ப‌து போல‌ ஒளிவீசும் உப்ப‌ங்க‌ளிக‌ளை கொண்ட‌வ‌னே...
இங்கே முத்தை உப்போடு ஒப்பீடு செய்த‌து போல் கொண்டாலும்,
முத்துக‌ள் உப்பு போல் கொட்டி கிட‌க்கும் என்று கொண்டாலும்
வ‌ள‌மை, உவ‌மை... அருமை.
000

13 comments:

நேசமித்ரன் said...

சொக்கிப் போய் கிடக்கிறேன் நண்பரே
எவ்வளவு அற்புதமான உவமைகள் அவை உருவாக்கும் மனவெளிச் சித்திரங்கள்
உங்கள் ரசனைக்கும் பாராட்டுக்கள்

Ashok D said...

thanz teacher, நெறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தது.

ஆ.சுதா said...

நன்காரியம்.
வியப்பாக படித்தேன். நன்றி,
இன்னும் நிரைய இலக்கய பதிவுகள்
பதியுங்கள்.

பா.ராஜாராம் said...

என்ன அருமையான ஒப்பீடும் பார்வையும்!...வாழ்த்துக்கள் உயிரோடை!

Vidhoosh said...

Wonderful.
--vidhya

சதங்கா (Sathanga) said...

அத்தனையும் கலக்கல் (நம் வயிற்றைத் தான் :))) உவமைகள். இப்பல்லாம் இது போல் யாராவது எழுதுகிறார்களா ?

உயிரோடை said...

வாங்க‌ நேச‌மித்திர‌ன். ந‌ன்றி.

வாங்க‌ D.R.அசோக். ந‌ன்றி.

வாங்க‌ ஆ.முத்துராம‌லிங்க‌ம். ந‌ன்றி.

வாங்க‌ பா.ராஜாராம். ந‌ன்றி.

வாங்க‌ வித்யா. ந‌ன்றி.

வாங்க‌ ச‌த‌ங்கா. ந‌ன்றி.

அகநாழிகை said...

உயிரோடை,
அருமையான கவிதைகள், உவமை.
ஆச்சரியம்தான்,
எப்படி இதெல்லாம்.
ஐந்திணை ஐம்பது அருமையான கவிதைகள்.
புத்தகம் கிடைத்தால் எனக்கொன்று வாங்கிக் கொடுங்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

தேவன் மாயம் said...

முத்துக்கள் பல கோர்த்து நீங்கள் வழங்கிய இந்த அணி தமிழ் வளர்க்கும்............தொடர்ந்து நிறைய எழுதவும்!!

தேவன் மாயம் said...

தங்களைப் போன்ற சிலரால் நானும் அருந்தமிழ்ப் பதிவிட ஆசையேற்படுகிறது..

உயிரோடை said...

வாங்க அகநாழிகை. கருத்துக்கு நன்றி.

வாங்க தேவன்மாயம். கருத்துக்கு நன்றி. எழுங்க படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.

cheena (சீனா) said...

சங்க இலக்கிய காலத்தில் இயற்கையை ஒட்டியே பாடல்கள் புனையப்பட்டன - புலவர்களும் இயற்கையை ரசித்த வண்ணம் உவமைகளும் ரசனைகளுமாக பாடல்கள் எழுத - அதை ரசிக்கும் நல்ல உள்ளங்களும் அக்காலத்தில் இருந்தன.

நல்வாழ்த்துகள் இடுகை இட்டதற்கு

Raja said...

அருமையான பதிவு இது...தொடர்ந்து எழுதுங்கள்...