அவரவர் கைமணலைத் துழாவிக் கொண்டிருந்தோம்
எவரெவர் கைமணலோ இவை என்றேன்
பிறகு மணலறக் கைகழுவி விட்டு
எங்கோ சென்றோம்.
- தேவதச்சன்
கடற்கரையில் மிகப் பிரியமானவருடன் அமர்ந்து நிலவோளியும் நிம்மதியும் நிறைந்த தென்றல் தழுவும் ஒரு மாலையில், துழாவும் கைமணல் கூட கடல் போல் விரியும் கவிதைக்கான படிமம் தான்.
இப்படிப்பட்ட சூழலில் பேசப்படும் எல்லாமே அழகாக இருக்கும். அந்த சூழலையே கவிதையாக்கிய ‘அவரவர் கைமணல்‘ என்ற தேவதச்சனின் கவிதையை வாசித்ததும் என்னுள் தழைத்தெழுந்த சிந்தனைகளை தருகிறேன்.
அவரவர் கவிதை
எந்தக் கவிதையை பேசினாலும் அது என்றோ உணரப்பட்ட அனுபவமாகவே இருக்கின்றது. பின்னும் பேசிப்பேசி தீர்க்கின்றோம். பேசி கவிதைகளை காற்றில் உலவவிட்டு மெல்ல திரும்புவோம் அவரவர் வெளிக்கு திரும்புகின்றோம் சுவடுகள் கலைத்து.
அவரவர் பிரச்சனை
பிரச்சனைகள் அவரவர் துழாவும் கைமணல் போன்றது. அடுத்தவர் கைமணலை பார்க்க ஆரம்பித்தால் தம் கைமணல் மிகவும் குறைவானதென்று தெரியவரும். நம்மிலும் கீழே வாழ்பவர் கோடி என்ற கண்ணாதாசன் வரிகளை உணர்ந்தெடுத்தால், மணலறக் கை கழுவுதல் வசப்படும்.
பிரச்சனைகளை சிறிது தள்ளி நின்று பார்த்தால், கவனித்தால் பிரச்சனைகள் சுமையல்ல என்பது புரியவரும். அதன் பின் தெரியும் பிரச்சனை மணல் போன்றதே, பெரியதல்ல மிகச்சிறியதென்று. எந்த நேரத்திலும் மணலறக் கைகளை கழுவது போல பிரச்சனைகளும் எளிதாக தீர்க்க கூடியவையே என்பதும் புரியும்.
அவரவர் கருத்து
விவாதம் சில சமயம் சர்ச்சையில் கூட முடியலாம். ஆயினும் கூட்டமோ பயணமோ முடிந்த பின் தத்தம் கருத்துக்களை தம்மோடு வைத்துக் கொண்டு அந்த அனுபவத்தை சுமந்தபடியோ அவரவர் வீட்டுக்கும் வழக்கமான வாழ்க்கைக்கும் திரும்புவது வழக்கமான வழக்கம் தானே. அதன் பின் அந்த சர்ச்சைகள் கைவிடப்பட்ட கடற்கரை மணல் போல் அடையாளம் தொலைத்து போகும். அந்த கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் எல்லாம் பின்னொரு கூட்டத்தில் வேறு விதமாக அலச பெறும்.
அவரவர் கர்வம்
இதற்காகவே ஆடை அலங்காரங்களில் நடையுடை பாவனைகளில் அல்லது இதுகளற்ற ஏதோ ஒன்றை துழாவிக் கொண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் ஆழ்ந்து பார்ப்பின் இந்த உடல் நம்முடையது மட்டுமே என்ன. உடல் ஒரு சட்டை தானே. ஆன்மாவன்றோ அழிவற்றது.
அவரவர் உடல் எவரெவர் உடலோ. பட்டினத்தார் சொல்லும் "எத்தனை பேர் தொட்ட முலை, எத்தனை பேர் இட்ட குழி" என்ற பாடல் தேவதச்சனின் இந்த கவிதைக்கு மிகவும் பொருந்தத்தக்கதாகும்.
ஆகையால் தான் தன் உடல் தன் கருத்து தன் பிரச்சனை தன் கவிதை என்ற எல்லா கர்வமும் மாயையே. துழாவிய கைமணல் போல எப்போதும் எதையும் சிந்தையில் ஒட்டாது வைத்திருந்தால் வாழ்வு மிக சிறப்பாகும்.
000
13 comments:
நானும் உங்கள் பதிவுகளைப் படித்து கருத்து ஏதும் இட வேண்டும் என்றே நினைக்கிறேன்.
ஆனால், உங்கள் பதிவுகள் கொடுக்கும் சிந்தனை வலைகளில் சிக்கி, கருத்துக்கள் அடுத்தடுத்து ஒரு சிந்தனை பிறக்கிறது.
பிடித்திருக்கிறது.
நட்புடன்
வித்யா
அருமையான கவிதையும் தங்கள் கருத்துக்களும் நன்று. பகிர்வுக்கு நன்றி.
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?!
பல்வேறு சிந்தனைகள் - இந்தப் பதிவு படிச்ச அப்புறம். நல்ல பதிவு லாவண்யா.
அனுஜன்யா
லாவண்யா,
அருமையான பதிவு.
கவிதையை எப்படியெல்லாம் அவரவர் அனுபவம் சார்ந்தும், புரிதல் சார்ந்தும் அணுகலாம் என்பதற்கு உங்கள் கவிதை விமர்சனம் உதாரணம்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நல்ல பதிவு
கவிதைகள் குறித்த உங்கள் ஆழமான பார்வை எப்போதுமே என்னை கவர்ந்த ஒன்று, அப்படி இந்த தேவதச்சனின் கைமணல் கவிதை குறித்த உங்கள் சிலாகிப்பும் அருமை.
வாங்க வித்யா. கருத்துக்கு நன்றி.
வாங்க குடந்தை அன்புமணி. நன்றி.
முத்துவேல். கொஞ்சம் உங்க கருத்தையும் சொல்லுங்க இந்த கவிதை பற்றி.
வாங்க அனுஜன்யா. கருத்துக்கு நன்றி.
வாங்க அகநாழிகை. கருத்துக்கு நன்றி.
வாங்க ராதாகிருஷ்ணன். நன்றி.
வாங்க யாத்ரா. நன்றி.
அழகான பதிவு இது...!!!!
உயிரோடை சிறுகதை போட்டிக்கு எனது கதை போட்டிருக்கிறேன். வருகை தாருங்கள்.
http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_10.html#links
vanakkam lavanya
kavithaigal meethana unga thettam purikirathu.innum konjam sirathai ,mozhi pattriya kavanam thevai.
hari
நல்லா இருக்கு உங்க சிந்தனைகள்..
இனிய லாவண்யா
என் கவிதை வெற்றுக்கோப்பை குறித்து ஆழமாக எழுதியுள்ளீர்கள்.நன்றி.என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
Post a Comment