Tuesday, November 24, 2009

பிரிவின் துயர்

சங்கப்பாடல்களின் பிரிவின் துயரை பெரும் அளவில் பெண்களே பேசி இருக்கின்றார்கள். பசலை படித்திருத்தல், கைவளை கழன்று விழுதல் என்று பெண்ணிற்கே பிரிவின் துயர் அதிகம் என்று காட்டி உள்ளார்கள் சங்க காலத்து பெரியோர். அப்படிப்பட்ட பிரிவின் ஆதங்கமாக ஐந்திணை ஐம்பதில் பாலைத் திணையிலிருந்து ஒரு பாடல்.

"கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தான் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல், - நல்லாய்! -
தொடி ஓடி வீழத் துறந்து?"

"நல்ல குணங்கள் நிறைந்த தோழி, கடிது ஓடும் கானல் நீரை "நீர் ஆம்" என்று எண்ணி, ஆண்யானை தன் துணையோடு நெடும் தூரம் அலைத்தோடி பின் கால் ஓய்து விழும், வெடிப்புகளும் வெம்மையும் நிறைந்த அப்படிப்பட்ட கொடுங் கானம் வழி, என் கை வளையல்கள் கழண்டு விழும் படி என்னை துறந்து செல்வாரோ நம் தலைவர்?"

இந்த சங்கக்கவிதையை படிக்கும் போது சமீபத்தில் படித்த பாலைத் திணை என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாலைத்திணை காயத்ரியின் கவிதை நினைவிற்கு வருகின்றது.

6 comments:

ஆ.சுதா said...

நல்ல நினைவு கூறல்.. அப்படியே அந்த கவிதையையும் பதிவிட்டிருக்கலாமே!

உயிரோடை said...

கண்டிப்பாக பதிவு செய்வேன். அவங்க வலையில் தேடினேன் அந்த கவிதையை காணவில்லை விரைவில் அவர்களை கேட்டு வாங்கி பதிவு செய்யறேன்

காமராஜ் said...

ஒரு அலாதியான முயற்சி.
நன்றாக இருக்கிறது லாவண்யா,
முதுராமலிங்கம் சொன்னதுபோலே
கவிதை வந்திர்ந்தால் இன்னும் நல்லது.
வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

வாங்க காமராஜ் கண்டிப்பாக அந்த கவிதையை விரைவில் பதிவிடுவேன். அவர்கள் தற்சமயம் தொடர்பில் இல்லாத காரணத்தாலும், வலைப்பூவில் அந்த கவிதை இல்லாத காரணத்தாலும் பதிவிடவில்லை. மன்னிக்க

உயிரோடை said...

முத்துராமலிங்க‌ம் ம‌ற்றும் காம‌ராஜ் கேட்ட‌த‌ற்கு இண‌ங்க‌

http://gayatri8782.blogspot.com/2007/04/blog-post_28.html

பாலைத்திணை காய‌த்ரியின் பாலைத்திணை க‌விதை

Anonymous said...

இது எனது ப்ளாக் ஸ்பாட்டின் முகவரி

http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/search?updated-min=2009-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=2010-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=7





இதில் எனது கதைகளை (இந்த வருட சிறுகதைகள்) பதிவு செய்துள்ளேன்.
இந்த கதைப்போட்டிக்கு

கரும்பச்சை,
தாவணிக்கனவுகள்,
ஸ்பெஷல் கிளாஸ்,
ஒரு தடவை,
மீண்டும்,
சிங்கப்பல் - பாகம் ஒன்று


ஆகிய சிறுகதைகளை அனுப்ப விரும்புகிறேன். எனது
போன வருட சிறுகதைகளை போட்டிக்கு அனுப்ப வில்லை.



நன்றி
பாபு