Monday, September 24, 2012

ஏன் அண‌ங்குற்ற‌னை?



ம‌ல்லிகைக்கும் என‌க்கும் மிக‌ அழ‌கான‌ பொருத்த‌முண்டு. சில‌ நிக‌ழ்வுக‌ள் வாழ்வில் ம‌ல்லிகையோடு பிணைத்து க‌ட்டி என்னை இழுத்து சென்ற வ‌ண்ண‌மிருக்கிற‌து. ஓரிரு மாத‌ங்க‌ளுக்கு முன் என் உற‌வின‌ர் இல்ல‌ திரும‌ண‌த்தில் எதிர்பார்த்த‌ அள‌வு ம‌ரியாதை கிடைக்காம‌ல் நான் சற்றே அண‌ங்குற்றிருந்த‌(துன்ப‌முற்றிருந்த‌) நேர‌ம். உற‌வின‌ர் வீட்டிக்கு செல்லும் முன்ன‌மே என் த‌லையில் கொஞ்ச‌ம் ம‌ல்லிகை இருந்த‌து. உற‌வுப் பெண் என‌க்கு இறுவாச்சி ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கொடுத்து உப‌ச‌ரித்தாள். நான் வேண்டாமென்றேன். இறுவாச்சி ம‌ல்லிகை திருச்சிக்கார‌ர் அனைவ‌ர்க்கும் பிடிக்கும் என்னை தவிர‌. இறுவாச்சி பார்க்க‌ குண‌மாக‌ இருக்காது(க‌ர‌டுமுர‌டாக‌ இருக்கும்) ஆனால் குண்டு ம‌ல்லியை விட‌ ரொம்ப‌ செரிவாக‌ ம‌ண‌க்கும். அதுவும் அந்த‌ பெண் கொடுத்த‌ ச‌ர‌ம் ஏக்கு மாக்காக‌ தொடுக்கப்பட்‌டிருந்த‌து. பார்க்க‌ நேர்த்தியாக‌ கூட‌ இல்லை. வேண்டாமென்றேன். நான் கொஞ்ச‌ம் துய‌ர‌மாக‌ இருந்த‌து என் அக்காவிற்கு ம‌ட்டும் தெரியும். அத‌ன் கார‌ண‌மாக‌ ம‌றுக்கிறேன் என்றும் என்னை த‌வ‌றாக‌ நினைப்பார்க‌ள் என்றும் வ‌ற்புறுத்த‌ என்று அதையும் வைத்துக் கொண்டேன். ஆனால் ம‌தியாதார் வாச‌லென்றால் ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கூட‌ அண‌ங்குற‌ செய்யும் போலும்.



எங்க‌ள் வீட்டுத் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகைப்புத‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. அனைத்தும் அடுக்கு குண்டு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை அள்ளி அள்ளி த‌ருப‌வை. ஒவ்வொன்றும் சின்ன‌ ரோஜாப்பூ போல‌ இருக்கும். இங்கே டெல்லி வாழ் ம‌க்க‌ள் யாருமே ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை தொடுத்து த‌ங்க‌ள் த‌லையில் சூடுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் வீட்டில் எத‌ற்கு ம‌ல்லிகை ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்க்கின்றார்க‌ள் என்றே தெரியாது. கேட்பார் எவ‌ருமின்றி அவையும் தாம் பாட்டுக்கு ம‌ல‌ர்ந்து ம‌ண‌ம் வீசி ம‌ண்ணில் வீழும். இந்த‌ கார‌ண‌த்தினால் டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எல்லாமே அண‌ங்குற்ற‌து போலும். இந்த‌ வ‌ருட‌ம் ம‌ல‌ரும் எந்த‌ மல்லிகை ம‌ல‌ரிலும் அந்த‌ அள‌விற்கு ம‌ண‌மில்லை.(வெப்பம் மிக அதிகரித்திருப்பது காரணமாக இருக்கலாம்). திருச்சியில் அம்மா ம‌ல்லிகை பூவை இர‌வு குளிரூட்டியில் சேமிக்க‌ வேண்டுமென்றால் வாச‌ம் வெளியேறாம‌ல் இருக்க பிர‌த்தியோக‌ க‌வ‌ன‌மெடுத்து சேமிப்பார்க‌ள். க‌வ‌ன‌ம் குறைந்தால் ம‌றுநாள் காப்பி, இட்லி எல்லாமே ம‌ல்லிகை பூவாச‌த்தோடே ப‌றிமாற‌ப்ப‌டும். டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எப்போதும் அந்த‌ அள‌வு ம‌ண‌க்காதென்றாலும் இந்த‌ வ‌ருட‌ம் மெல்ல‌ முன‌கிய‌ப‌டி ம‌ண‌ப்பதாக,‌ ஏன் அண‌ங்குற்ற‌னை ம‌ல்லிகையே என்று கேட்டு வ‌ருந்தும்ப‌டியே இருக்கின்ற‌து.

குறிப்பு:அண‌ங்குற்ற‌னை என்ப‌து "யார் அண‌ங்குற்ற‌னை க‌ட‌லே" என்றும் குறுந்தொகையிலும் "இவ‌ள‌ ண‌ங்குற்ற‌னை போறி" என்று ஐங்குறுநூற்றிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ வார்த்தை. அந்த‌ வார்த்தையால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு எழுதிய‌ ப‌திவிது. யார் கார‌ண‌மாக‌ இவ்வ‌ள‌வு "துய‌ர‌மாக‌" ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்கின்றாய் என்று குறுந்தொகையில் த‌லைவி க‌ட‌லை நோக்கி கேட்ப‌து போல‌வும், ஐங்குறுநூற்றில் த‌ன் ம‌னை விடுத்து பிற‌ரிட‌ம் போன‌ த‌லைம‌க‌னிட‌ம் த‌லைவியின் தோழி நீ யாரிட‌ம் த‌ற்ச‌மய‌ம் யார் மேல் மைய‌ல் கொண்டாயோ அவ‌ளை விட்டு நீ நீங்கி சென்றாள் தலைவியை போல் அல்லாது அவ‌ள் "துன்புற்ற‌வ‌ள்" போல பாசாங்கு ம‌ட்டுமே செய்வாள் என்று எடுத்துரைப்ப‌து போல‌வும் அமைந்த‌ பாட‌ல்க‌ள் அவை.

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் மல்லிகை வாசம்! நல்லதொரு பகிர்வு.

Unknown said...

உங்கள் வாழ்வில் நீங்கள் இனி எப்போதுமே "அண‌ங்குற்ற‌னை" இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் "அண‌ங்குற்ற‌னை" பதிவில் புதிய வார்த்தையை அறிந்து கொண்டேன்
நன்றி
தேவராஜ் விட்டலன்
என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள
உங்கள் யோசனைகளை எதிர்பார்கிறேன்

முனைவர் இரா.குணசீலன் said...

இலக்கியம் வாசம் வீசுகிறது...

இதோ தங்கள் பார்வைக்கு..

யாரணங்குற்றனை கடலே..

http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_24.html

Sugirtha said...

இது இன்னொரு லாவண்யா ஸ்பெஷல்! :)
மல்லிகை எனக்கும் பிடிக்கும். இறுவாச்சி மல்லிகை ன்னா எதுன்னு தெரியல.ஆனா அணங்குற்றனைன்னு ஒரு வார்த்தையும் அப்படின்னா என்னன்னும் தெரிஞ்சுது.நன்றி!

உயிரோடை said...

வாங்க வெங்கட் நாகராஜ். நன்றி.

வாங்க விட்டலன். நன்றி.

வாங்க முனைவர். இரா.குணசீலன். நன்றி.

வாங்க சுகி. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_28.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-