Thursday, September 24, 2009

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி IIIகைந்நிலை (பாடல் 26) - உணர்வு நிலை காட்சிப் பிழை போல மனப்பிறழ்ச்சி

இந்த‌ பாட‌லின் ஓரிரு வார்த்தை சிதைந்து போயிருக்கின்ற‌ன‌.

குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன,
.... .... சேவல் எனப் பிடவம் ஏறி,
பொரு தீ என வெருளும்; - பொன் நேர் நிறத்தாய்! -
அரிது, அவர் வாராவிடல்.

செந்காந்த‌ள் ம‌ல‌ர் க‌ண்ட‌ சேவ‌ல் த‌ன்னோடு ச‌ண்டையிடும் மற்றுமொரு சேவ‌ல் என்றெண்ணி பிட‌வ‌ம் கொடுமேலேறி நின்ற‌ சேவ‌ல் பின் அதை பொருந்தீ என்று அஞ்சி அங்கிருந்து அக‌ன்று சென்று விட்ட‌து. பொன்னை போல் மின்னும் நிற‌த்தை உடையவளே அவ‌ர் வாராம‌ல் போனால் ந‌ம் வாழ்வ‌து அரிதாகிவிடும்.

செந்நிற‌ காந்த‌ள் ம‌ல‌ர்க‌ள் க‌ண்ப‌தற்கு எரியும் நெருப்பென‌ இருக்கும், அதை தொலைவிருந்து க‌ண்ட‌ சேவ‌ல் தோற்ற‌ மயக்கத்தில் அது ஒரு சேவ‌லென்றும் பின் அதையே தெளிவாக‌ காணும் போது நெருப்பென்று அஞ்சுவ‌தாக‌ வ‌ரும் இந்த‌ பாட‌லில் உட்க‌ருத்தாக‌ த‌லைவ‌ன் மேல் த‌லைவி கொண்ட‌ அவ‌ந‌ம்பிக்கை நன்கு புல‌ப்ப‌டுகின்ற‌து, கான‌ல் நீரை காத‌லென்று எண்ணி ஏமார்ந்த‌ விச‌ய‌த்தை சூச‌க‌மாக‌ சொல்லி இருக்கின்றாள் த‌லைவி மேலும் அவ‌ன் திரும்பி வார‌விடில் அரிது என்று சொல்லுமிடத்தில் அவ‌ளுடைய‌ ம‌ன‌வ‌லியை வெளிப்ப‌டுத்தி இருக்கின்றாள். இந்த‌ பாட‌லை அக‌த்திணையின் மாறும் உன் முகம் என்ற‌ க‌விதையோடு ஒப்பிட‌லாம்.

மிக‌ அசாதார‌ண‌மான‌ மொழியில் காத‌ல் க‌ண‌வ‌னின் காத‌ல் மற்றும் க‌ல்யாண‌ம் அல்ல‌து அதை போன்ற‌தொரு பிணைக்கப்பட்ட‌ சூழ‌லின் போது நிக‌ழும் ஏமாற்ற‌ங்க‌ளை அழ‌காக‌ பேசியுள்ளார் இக்க‌விதையில். க‌விதை ஆர‌ம்பிக்கும் போது அவ‌ன் காத‌லின் க‌ட்டுண்டு கிட‌க்கும் த‌ன்னிலையை மென்மையாக‌ தெரிவித்துள்ளார். அத்த‌னை காத‌லும் ஆண்மைச் செருக்கும் வெற்றியின் வெறியும் என்னை த‌கிக்கின்ற‌ன‌ என்று சொல்லுமிடம் த‌ள‌ர்ந்து போகிறார்.

விளிம்புக‌ள் சிவ‌ந்த‌ விழிக‌ளின்
இருளில் த‌ட‌ம் தெரியாது த‌டுமாறுகிறேன்
நீ யாரென்று அறியாது

என்ற‌ வ‌ரிக‌ளில் க‌னிமொழியின் உயிர்வ‌லி உர‌க்க‌ ஒலிக்கின்ற‌து. நெரும்பை செந்காந்த‌ள் ம‌ல‌ரே நினைத்து ர‌சித்து நுக‌ர்ந்து பின் வெதும்பிய‌ நிலை புரிகின்ற‌து. இதையே தமிழ்நதியின் சூரிய‌ன் த‌னித்த‌லையும் ப‌க‌ல் தொகுதியில் பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது என்ற கவிதையில்

படகேறி வந்தபோது பார்த்த கடல்
இளம்பச்சை என்றான்
பின் தயங்கி இரத்தம் என்றான்


என்ற வரிகளை படிக்கும் போது பதறுகிறது. அந்த அளவு வன்முறை வாட்டிய மனிதர்களுக்கு இயற்கை கூட வேறு வடிவமாக தெரிகின்றது. வேதனை தான்.

(தொடரும்...)

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி II

9 comments:

அகநாழிகை said...

அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

காமராஜ் said...

//படகேறி வந்தபோது பார்த்த கடல்
இளம்பச்சை என்றான்
பின் தயங்கி இரத்தம் என்றான்

என்ற வரிகளை படிக்கும் போது பதறுகிறது. அந்த அளவு வன்முறை வாட்டிய மனிதர்களுக்கு இயற்கை கூட வேறு வடிவமாக தெரிகின்றது. வேதனை தான்.//

அறியத்தந்தமைக்கு நன்றி லாவண்யா.

இரசிகை said...

thodarungal.........nantraaka ullathu.

Nundhaa said...

nice ... please continue ...

றமேஸ்-Ramesh said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்...
//இந்த‌ பாட‌லின் ஓரிரு வார்த்தை சிதைந்து போயிருக்கின்ற‌ன‌.///
தேடித்தேடிப் பாருங்கள் முழுமையாகத் தந்தால் இன்னும் நல்லது நண்பரே

றமேஸ்-Ramesh said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்...
//இந்த‌ பாட‌லின் ஓரிரு வார்த்தை சிதைந்து போயிருக்கின்ற‌ன‌.///
தேடித்தேடிப் பாருங்கள் முழுமையாகத் தந்தால் இன்னும் நல்லது நண்பரே

padma said...

நன்றி லாவண்யா

சே.குமார் said...

அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

உயிரோடை said...

வாங்க அகநாழிகை. மிக்க நன்றி.

வாங்க காமராஜ். மிக்க நன்றி.

வாங்க இரசிகை. மிக்க நன்றி.

வாங்க நந்தா. மிக்க நன்றி.

வாங்க றமேஸ்-Ramesh.மிக்க நன்றி.

வாங்க பத்மா. மிக்க நன்றி.

வாங்க சே.குமார். மிக்க நன்றி.