Thursday, December 24, 2009

சுவீட் சுவீடன் - பகுதி 3

அடுத்த இரண்டு வாரங்களும் அலுவலகம் அறை மைக்ரோவேவ்(அடுப்படி) வேலை வேலை மற்றும் வேலை என்றவாறு கழிந்தது. ஒவ்வொரு வார இறுதியிலும் அலுவலக நண்பர்களை எங்காவது செல்லலாமா என்று கேட்பேன் அவர்களும் சொல்கின்றோம் என்று சொல்லி ஒன்றும் சொல்லாமல் விட சமையல் தூக்கம் இணையம் வேறு வழியே இல்லாமல் அலுவலையாவது முடிப்போம் என்று கழிந்தது. ஆனால் வித்தியாசமாக நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த வார இறுதியில், வெள்ளி இரவில் விடுதி வரண்டாவில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி புரிய வந்திருந்த நான் தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்த ஒரு குழுவை(group) சந்தித்தேன். இந்த குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவார். ஒருவர் சென்னையை சேர்ந்தவர் வேறு. நாளை நாங்கள் வெளியே செல்கின்றோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களோடு வரலாம் என்றார் சென்னையை சேர்ந்த அந்த நண்பர்.

மறுநாள் நானும் தயாராகி வெளியே செல்ல கிளம்பினோம். அந்த குழுவில் ஒரு நண்பர் பனி துகள்களை கை நிறைய வாரி அடுத்தவர் மீது எறிந்து விளையாடுவது போல என்னை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு அவர்கள் நால்வரும் பனிதுகள்களை ஒருவர் மீது ஒருவர் எறிய ஆரம்பித்தனர். பின் நடக்க ஆரம்பித்தோம். எங்கள் விடுதிக்கு எதிரே பெரிய மேடான இடம் இருக்கும். ஒரு 50 படிகட்டுகள் ஏறிதான் மெட்ரோ ஸ்டேசன், மார்கெட் எல்லாம் போக வேண்டும். அங்கிருந்து பார்த்தால் எங்கள் விடுதி மற்றும் சில கட்டிடங்கள் எல்லாம் ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இருப்பது போல இருக்கும். மிக பரந்தவெளி முற்றிலும் பனியால் சுழப்பட்ட வெள்ளி பள்ளத்தாக்கு போல பார்க்க பிரம்பிப்பாக இருக்கும்.அந்த பள்ளத்தாக்கில் மேட்டிலிருந்து கீழ் வரை சில சிறுவர்கள் ஒரு ப்ளாடிக்காலான படகு போன்ற ஒரு வஸ்துவில் அமர்ந்து நாம் சரக்கு மரத்தில் சறுக்குவோமே அதை போல சறுக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். பார்த்தால் நமக்கும் கூட ஆசை வரும்.

மெட்ரோ நிலையம் அடைந்தபின் அவர்கள் ஒருவருக்குள் ஒருவராக தங்களை கேட்டு கொண்டனர் எங்கே செல்ல வேண்டும் என்று(அடப்பாவிகளா எங்க போகணும் தீர்மானம் பண்ணாமலேவா கிளம்புவீக) ஒரு வழியாக பனிசறுக்கு விளையாடுமிடம் செல்லலாம் என்று முடிவாயிற்று. அங்கே போய் அனைவரும் விளையாட வேண்டும் என்று முதலிலேயே தீர்மானம் ஆயிற்று. அங்கே சென்றதும் தான் தெரிந்தது. மீண்டும் ஸ்டாக்ஹோமே கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் பார்த்த அதே இடங்கள். ஒரு இடத்தில் நிறைய பேர் பனி சறுக்கு விளையாடி கொண்டு இருந்தார்கள். உடன் வந்த நண்பர்கள் வாங்க நீங்களும் கட்டாயம் பனி சறுக்கியே ஆக வேண்டும் என்று கட்டயமாக அந்த சறுக்கு காலணிகளை வாங்கி தந்தார்கள். வாங்கி போட்டு கொண்டு வைத்த முதல் அடியே விழுந்தேன். மீண்டும் எழுந்து களமிறங்கி 50 அடி தூரம் கடக்கும் முன் ஒரு 6 முறை விழுந்து(விழுவதில் பிரச்சனை இல்லை பின் எழுந்து நிற்பது மிக சிரமாக இருக்கின்றது) குழந்தை போல சிறிய அடி வைத்து ஒரு மணி நேரத்தில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து அந்த காலணிகளை கழட்டிவிட்டு நம் காலணிகளை அணிந்தால் ஏதோ வித்தியாசமா(எஸ்டிரா பிட்டிங்க் இல்லாத)ஒன்றை போட்டிருப்பதை போல ஒரு உணர்வு. பத்தடி நடந்த பின் தான் விழமாட்டோம் வழக்கமா நடக்கிற மாதிரி நடக்கிறோம் என்ற நம்பிக்கை வருகின்றது.

அடுத்த வாரம் வெள்ளி மாலை அருள்மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் சென்று வந்தது மிக திருப்தியாக இருந்தது. சனியன்று பனிமலை இருக்கும் ஒரு இடம் செல்ல வேண்டும் என்று நண்பர்கள் பணித்தனர். அங்கு சென்று மலை பனிசரக்கு(ஸ்கியிங்) செல்வதாக திட்டம். மிக பயத்தோடு சென்றேன். முற்றிலும் வெள்ளை தோல் போர்த்த பனிமலை எவ்வளவு அழகு, எவ்வளவு குளுமை. கால் நரம்பின் வழியாக தலை வரை ஒரு சில்லிட்ட உணர்வு பரவும். சொல்ல மிக பரவசமாக இருந்தாலும் ஊஊகுகு ரொம்ப குளிர். அந்த மலையின் சரிவுகளை கண்டதும் ஒருவரை தவிர அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட தப்பித்தேன். ஞாயிறு அன்று ட்ரோட்டின்கோம் மாளிகை சென்றோம். மாளிகை என்று பெரிய எதிர்பார்ப்போடு சென்றால் சற்று ஏமாற்றமே தரும். சில ஓவியங்களை தவிர வேறு எதுவும் சொல்லும் படி இல்லை.

10 comments:

பரிசல்காரன் said...

அருமை!

பரிசல்காரன் said...

ஹை! மீ த ஃபர்ஸ்ட்!

பரிசல்காரன் said...

//குழுமை//

தமிழில் புதிய சொற்களை அறிமுகப் படுத்தும் அரும்பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதைச் சொல்லவே இல்லையே மின்னல்!

SanJai காந்தி said...

நல்லா எழுதி இருக்கிங்க..

Jeeves said...

செல்லாது செல்லாது. புகைப்ப்டங்கள் இல்லாத பயணக்கட்டுரை செல்லாது.

மின்னல் said...

வாங்க பரிசல் சார். எழுத்துப்பிழையை இவ்வளவு அழகா யாருமே சுட்டினது இல்லைங்க. நன்றி.

வாங்க SanJai காந்தி. நன்றி

ஜீவ்ஸ் எல்லா போட்டோவிலும் நான் தெரியலை ஜாக்கெட் மட்டும் தான் தெரியுது. இந்த குளிரில் எங்கத்த போட்டோ எடுக்க.....

மங்களூர் சிவா said...

அருமையா இருந்தது பயணக்கட்டுரை!

புதுகை.அப்துல்லா said...

ஆஜர் :)

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Shrek said...

did you do snowboarding? great.

//எழுந்து களமிறங்கி 50 அடி தூரம் கடக்கும் முன் ஒரு 6 முறை விழுந்து//

same blood :))