Thursday, December 24, 2009

பரவசமாய் ஆரம்பித்த ஒரு வார இறுதி

வெள்ளி கிழமை காலையிலேயே எதிர் அறை தமிழ் நண்பர் இன்று மாலை நாங்கள் வெளியே சொல்லும் திட்டத்தில் இருக்கின்றோம் நீங்கள் வர இயலுமா என்றார். சரி என்று சொல்லி வைத்திருந்தேன். அலுவலக எண்ணை வாங்கி கொண்டு அவரும் பக்கத்து அறை தோழி சென்று விட்டனர். வேலையில் மூழ்கியிருந்த நேரம் மாலை 5 மணிக்கு நண்பரின் அழைப்பு வந்தது. நாங்க இங்கே இருந்து கிளம்ப போறோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஹோட்டலில் இருப்போம். சித்தி விநாயகர் கோவில் செல்வதாக திட்டம் நீங்கள் சரியாக 6 மணிக்கு அறைக்கு வந்தால் எல்லோரும் போகலாம் என்றார். அவசர அவசரமாக மிச்சமிருந்த வேலையை முடித்துவிட்டு வேகமாக ஓடி வந்து அவர்களோடு சென்றேன். வழக்கம் போல் மெட்ரோ டி-சென்ரம் சென்று அங்கிருந்து இன்னும் ஒரு மெட்ரோ பிடித்து ஃபர்ஸ்ரா(Farstra) என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து ஒரு 5 நிமிடம் நடந்து சில படிக்கட்டுகள் ஏறினால் அருள் மிகு சுவீடன் சிறீ(ஸ்ரீ) சித்தி வினாயகர் ஆலயம் என்ற அன்பான பெயர் பலகை வரவேற்கும்.

அருள் மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் என்று தமிழ் எழுத்துகளை சுவீடனின் கண்டால் எப்படி இருக்கும். பரவசம் பொங்காது. அப்படிப்பட்ட பரவசத்தில் தான் இந்த
பதிவு. ஆம் சுவீடனில் சித்தி வினாயகர் ஆலயம் இருக்கின்றது. இலங்கை தமிழர்களால் நடத்த பெறும் இந்த ஆலயத்தை பற்றி என் பயண கட்டுரையில் மட்டும் அடக்கி விட முடியாத ஆவலால் தனி பதிவு. விநாயகர் தாள் சரணம்.

நாங்கள் உள்ளே நுழைந்த போது ஒரு 30 முதல் 35 பேருக்கு குறையாமல் கோவிலில் குழுமி இருந்தனர். நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை என்று தேன் மதுர குரலில் ஒரு அம்மையார் முருகன் மேல் பாடிக் கொண்டு இருந்தார். தொடர்ந்து இன்னும் ஒருவர் பிள்ளையார் கீத்தனம் கீச் குரலில் பாடி முடிக்க ஆரத்தி நடந்தது திவ்யமாக.

ஒரு சாம்பினாரி தூபக் கோல் போன்ற ஒன்றில் மூன்று வெற்றிலைக்கு நடுவில் ஒரு உடைத்த தேங்காய் மூடியும் அதன் மேல் ஒரு ஆரஞ்சு பழமும் வைத்திருந்தது பார்க்க மிக
நேர்த்தியாக அழகாக இருந்தது. சாப்பாடும் சாப்பரும் பரிமாறப்பட்ட இலையும், ஒரு தட்டில் நிறைய மோதங்களும் இருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பார்க்க
அருமையாக இருந்தார் வசந்த மண்டப்பத்தில்.

கோவில் மூலஸ்தானத்தில் பிள்ளையாரும், கொடி மரத்தை ஒட்டிய தூணோடு தும்ப விநாயகரும் நம்மை ஒரு சேர வரவேற்க்கின்றனர். கொடுமரத்திற்கு முன் பலிபீடம்முன் மூங்சூரும் கூட இருப்பது நம் ஊரில் இருப்பது போன்றே உணர்வை தருகின்றது. பிள்ளையார் கோவில் விட்டு வெளியே பார்வையை ஓட்டினால் பிரதானத்தின் வலப்பக்கம் ஒரு சிறு மண்டப்பத்தில் சிவனும் இடப்பக்கம் அம்பாளும், அப்படியே கோவிலை சுற்றினால் வலதுகோடியில் மஹாலஷ்மியும், இடது கோடியில் வள்ளி,தெய்வானை சமேத முருகனும், சற்றே முன்புறமாக நவகிரங்களும் வசந்தமண்டபத்தை தாண்டி பைரவரும் வீற்று இருக்கின்றனர்.

ஆரத்தி முடிந்து அனைவர்க்கு அளிக்கப்பட்ட விபூதியில் அப்படி ஒரு ஜவ்வாது வாசனை, வீடு வந்து சேரும் வரை கூட அதன் மணம் கமழ்ந்து கொண்டே இருக்கின்றது. பின் பாலும்,
பூக்களும்,சந்தனம் குங்குமமும் வழங்கப்பட்டன. கொஞ்சம்(ஒரு கரண்டி) எலிமிச்சை சாதம் தரப்பட்டது. சரி செல்லலாம் என்று எத்தனித்தால் பெரிய பாத்திரத்தில் சாம்பார் சாதம் சுடச்சுட கொண்டு வைத்தார்கள் அனைவர்க்கும் ஒரு தட்டில் சாம்பார் சாதமும், கொஞ்சம் பருப்பும், தயிரும் கூடவே அரை மோதகமும்(மிக அருமையாக இருந்தது உண்டு முடித்து சுவையாக இருக்கின்றது என்று மீண்டும் கேட்க சென்றேன் அதற்குள் தீர்ந்து விட்டது) கொடுத்தார்கள். இரவு உணவிற்கு வேறு எதுவும் தேவையில்லாத அளவிருந்தது அங்கே அருந்திய பிரசாதம்.

வயிரும், மனமும் நிறைந்ததொரு வார இறுதியின் தொடக்கத்தை என்னால் மறக்கவே முடியாது. சித்தியோடு புத்தியும் தரும் சீர் மிகு விநாயகர் அருள் பெருகட்டும் எங்கும்.

5 comments:

துளசி கோபால் said...

வெளிநாட்டுக் கோயில்கள் (அநேகமாக) எல்லாவற்றிலும் பிரசாதம் வகையில் நிறையத்தான் கிடைக்கிறது.

பிள்ளையாரை நானும் தரிசித்தேன்.

எம்.எம்.அப்துல்லா said...

:)

Unknown said...

ஸ்வீடனில் பிள்ளையார் கோவில்
சற்று அதிசயமாகப் பட்டது.

//நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை//

ஒரு மாதிரி “டெண்டு டாக்கீஸ்” குரல்
மறக்க முடியாது.

anujanya said...

ஸ்வீடன் தொடர் என்று போடலாமே. இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருந்தாலும் திடீரென்று முடித்ததைப் போல் இருந்ததால் புரியவில்லை. இந்தப் பதிவும் நல்லா இருக்கு. ஸ்வீடனில் சாம்பார் சாதம். அட்டகாசம்!

அது 'பலி' பீடம்தானா? போலவே 'பிரதானத்தின்' என்பது 'பிரகாரத்தின்' என்று வரவேண்டுமோ?

உயிரோசை கவிதை பிரசுரத்திற்கு வாழ்த்துகள். ஆனால் படிக்க முடியவில்லை. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. உங்கள் வலைப்பூவில் பதிவு செய்யவில்லையா?

அனுஜன்யா

உயிரோடை said...

வாங்க துளசி கோபால் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எம்.என்.அப்துல்லா நன்றி.

வாங்க கே.ரவிஷங்கர் நன்றி.

வாங்க அனுஜன்யா. கருத்துக்கு நன்றி. சுவீடன் பகுதி 3 விரைவில். அந்த தொடர் இன்னும் முடியலை.