ஐந்திணை ஐம்பது திணைக்கு பத்து பாடலாக ஐம்பது பாடல்கள் எல்லா திணையிலும் தலைவன் தலைவி, தோழி என்று அனைவரும் பாடி இருக்கின்றாங்க.
குறிஞ்சி திணையில் தன் விரக தாபத்தை இத்தனை வெளிப்படையா பேசி இருக்கின்றாள் ஒரு தலைவி. மாலை ஆகிவிட்டது. "வண்டுகள் ரீங்காரம் செய்வது அவளுக்கு உயிர் பிளப்பதை போலிருக்கின்றதாம்." மற்றுமொறு பாடலில் "சிறு குழலின் இனிய ஓசை அவளை வேல் கொண்டு தாக்குவது போலிருக்கின்றதாம்". காதல் நோய் கொடியதல்லவா எப்போதும்.
முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து.
தும்பி - வண்டு
மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.
------------------------------------------------------------------------------------
தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு.
ஆன் - பசு
தொடி - வளையல்
கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.
நன்றி சென்னை லைப்ரரி