Showing posts with label கவிதை போலும். Show all posts
Showing posts with label கவிதை போலும். Show all posts

Sunday, April 7, 2013

குடைக்கம்பி உடைத்த மௌனம்
















மௌனத்தின் ஆழ்கடல்
நிறைந்திருந்தது மனவெளியெங்கும்
நிறை நிம்மதி ஆழ் அமைதி
விளைவாய்
வறண்ட கவி மௌனத்தை
பூண்டதென் எழுதுகோல்

ஏங்கி கலைத்த
விழிகள் மீதும்
இரக்கம் கொள்ளவில்லை
என் எழுதும் பேனா

இடி மின்னலோடு கூடிய
ஒரு தேவதினத்தில்
மிகுமழைக்கு பின்னால்
குடைக் கம்பியொன்று
மழலை வாய்விடுத்த
முலைக் காம்பாய்
உதிர்த்துக் கொண்டிருந்த
நீர்ச்சொட்டுகள்
கலைத்தெறிந்தது
கொடும் அமைதியை

பூரித்த கவிதைகளை
எழுதும் கவிக்கோலை
நான்
கை பற்ற கூடும்
வெகு விரைவில்

Friday, September 24, 2010

அமில‌ம் தோய்தெரிந்த‌‌ நினைவுக‌ள்



ப‌க‌ல்கொள்ளைகார‌னிட‌ம்
காட் பிர‌மிஸ் கேட்கும்
சிறுமியின் அறியாமையோடு
தானிருந்த‌து என்
சகோத‌ர‌த்துவ‌ம் உன்னுட‌ன்

மெல்ல அதிர்ந்தேன்
முன்பொருமுறை
மேலும் அதிர்ந்தேன்
ப‌ல‌முறை சில‌முறை

இன்று தான் புரிகின்ற‌து
நான் என்றுமே அதிர‌வில்லை
இது தெரியும் வ‌ரை
போக‌ட்டும்

உண்மையும் பிரிய‌மும்
எங்கானும் ஒரு ஓர‌த்தில்
ஒளிந்திருக்கிற‌தா
தேடிப்பார்கிறேன்

பையெங்கும்
அமில‌ம் தோய்த்த‌த்
தெரிந்த‌ அம்பென‌
கையெங்கும் மிஞ்சிய‌து
நினைவுக‌ள்