மௌனத்தின் ஆழ்கடல்
நிறைந்திருந்தது
மனவெளியெங்கும்
நிறை நிம்மதி
ஆழ் அமைதி
விளைவாய்
வறண்ட கவி மௌனத்தை
பூண்டதென் எழுதுகோல்
ஏங்கி கலைத்த
விழிகள் மீதும்
இரக்கம் கொள்ளவில்லை
என் எழுதும்
பேனா
இடி மின்னலோடு
கூடிய
ஒரு தேவதினத்தில்
மிகுமழைக்கு
பின்னால்
குடைக் கம்பியொன்று
மழலை வாய்விடுத்த
முலைக் காம்பாய்
உதிர்த்துக் கொண்டிருந்த
நீர்ச்சொட்டுகள்
கலைத்தெறிந்தது
கொடும் அமைதியை
பூரித்த கவிதைகளை
எழுதும் கவிக்கோலை
நான்
கை பற்ற கூடும்
வெகு விரைவில்கை பற்ற கூடும்