Friday, January 24, 2003

எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள்



இன்றிலிருந்து "மின்ன‌ல் ப‌க்க‌ம்" "உயிரோடை" ஆக உருமாறுகின்ற‌து. மின்ன‌ல் என்ற‌ பெய‌ர் எனக்குப் பிடிக்கும் என்றாலும், பொதுப்புத்தி சார்ந்த பலருக்கும் அது முதலில் கேலிக்குரிய ஒரு சொல்லாக கையாளத் தோன்றியது. இதை நீண்ட‌ நாட்க‌ளாக‌வே என்னை அறிந்தோர் தெரிந்தோர் அனைவ‌ரும் கூறிக்கொண்டிருந்தார்க‌ள். அதுவும் சில இடங்களில் சென்றதும் "வாம்மா மின்ன‌ல்" என்ற‌ வ‌ச‌ன‌ம் கூற‌ப்பெற்ற‌து. அது என‌க்கு க‌வ‌லைய‌ளிக்க‌வில்லை என்றாலும் இல‌க்கிய‌த்துவ‌மும் ஒரு அழ‌கிய‌லும் இல்லாத‌ பெய‌ர் போன்றிருப்பதாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ முடிவு. இன்றிலிருந்து மின்ன‌ல் ப‌க்க‌ம் உயிரோடையாக‌ வ‌ல‌ம் வ‌ரும். என்னை தொட‌ரும் அன்ப‌ர்க‌ளுக்கு உயிரோடை என்ற‌ சுட்டி தானாக‌வே இணைக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

••••••

இந்த முறை சென்னை வந்த போது திருவ‌ர‌ங்க‌மும் சென்றிருந்தேன். எப்போதும் இரு முறை சேவிக்கும் வ‌ழ‌க்க‌ம் என‌க்கு. மேலும் 50 ரூபாய்க்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்தி தேவ‌ஸ்தான‌த்தில் தெரிந்த‌ ஒருவ‌ர் பெய‌ர் சொல்லிவிட்டு ர‌ங்க‌னை 5 நிமிட‌த்தில் சேவிக்கும் பாக்கிய‌ம் என‌க்கு அவ‌ன் த‌ந்திருக்கும் வ‌ர‌ம். ஆயினும் இந்த‌ முறை இர‌ண்டாம் நாள் மூல‌ஸ்தான‌ம் ர‌ங்க‌னை 5 நிமிட‌த்திலும், தாயாரை 10 நிமிட‌த்திலும், வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப்ப‌த்தில் உல்லாச‌மாக‌ வீற்றிருந்த‌ உற்ச‌வ‌ ர‌ங்க‌னை நீண்ட‌ வ‌ரிசைக‌ளுக்கும் இடிபாடுக‌ளுக்கும் பின் சேவித்தேன். கோவில் நிர்வாகிக‌ள் வ‌ச‌ந்த‌ உற்ச‌வ‌த்தின் போது வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப‌ வ‌ரிசைக‌ளை வ‌கைப‌டுத்தி க‌ட்டுப்ப‌டுத்தினால் என்னை போன்றோர் அதிக‌ம் பாடுப‌டாம‌ல் நிம்ம‌தியாக‌ சேவிக்க‌லாம். இல்லையென்றால் சேவிக்கும் புண்ணிய‌ம் அங்கே விய‌ர்த்துக் கொட்டும் எரிச்ச‌லிலேயே ச‌ம‌ன் செய்ய‌ப்ப‌டும். ந‌ல்ல அனுப‌வ‌ம். அதிலும் இந்த முறை என்னுடைய ரங்கனை கண்டு கொண்ட பரவசத்தில் எதுவுமே குறையாகத் தோன்றவில்லை.

••••••

கடந்த ஞாயிறு (31.05.2009) சென்னையிலிருந்து நான் செல்ல‌ வேண்டிய‌ விமான‌ம் அரைம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ கிள‌ம்பி டெல்லியை அடைந்தும் த‌ரையிர‌ங்க‌ அரை ம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ ந‌ள்ளிர‌வு தாண்டி டெல்லியை அடைந்திருந்தேன். விமான‌த்திலிருந்து இற‌ங்கும் போதே புய‌ல் முன்னும் பின்னும் நெட்டி த‌ள்ளி தீர்த்த‌து. விமான‌ நிலைய‌ம் விட்டு வெளியே வ‌ந்து சீருந்தை அடையும் முன்னேயே பேய் ம‌ழை கொட்ட‌ ஆர‌ம்பித்த‌து. இர‌ண்டு நாட்க‌ளாக‌ டெல்லியில் புய‌லும் ம‌ழையும் பெய்து க‌டுமையான‌ வெப்ப‌ம் த‌ணிந்து ர‌ம்மிய‌மான‌ சூழ‌லாக‌ இருந்தது சந்தோஷமாக இருந்தது.

••••••


க‌ட‌ந்த‌ வார‌ம் சென்னை சென்று வ‌ந்த‌தில் மிக‌ புதிய‌ அனுப‌வ‌ங்க‌ள். உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ள். என் மான‌சீக‌ குரு ம‌னுஷ்ய‌ புத்திர‌னை ச‌ந்தித்தோம். க‌ட்ட‌ற்ற‌ காட்டாறு போன்றிருந்த‌து அவ‌ர் பேச்சை. எந்த‌ எடுத்து த‌ந்தாலும் அதில் இருந்து பேசினார். சுந்த‌ர‌ராம‌சாமி முத‌ல் சுஜாதா வ‌ரை. உட‌ன் இருந்த‌ 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா மூவ‌ரும் அவ‌ருட‌ன் நிறைய‌ நேரம் பேசினார்க‌ள். நான் படிப்ப‌தும் எழுதுவ‌தும் மிக‌ குறைவென்ப‌தால் அதிக‌ம் பேச‌வில்லை. நிறைய‌ உரையாட‌ல்,ஒரு கப் காபி, ஒரு வேளை மதிய உண‌வென்று அவருடனான மிக‌ நீண்ட‌ ப‌கிர்த‌லுக்கு பின் ம‌ன‌ம் நிறைந்திருந்த‌து. பின் க‌ட‌ற்க‌ரையில் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா, 'நெய்த‌ல்' ச‌ந்திர‌சேக‌ர் ம‌ற்றும் 'சுய‌ம்' இராவ‌ண‌ன் இவ‌ர்க‌ளோடு மனுஷ்யபுத்திரனின் 'நீராலானது' தொகுப்பை முழுவதுமாக வாசித்து கருத்துப் பகிர்ந்தோம். பிறகு க‌விதை திரைப்பாட‌ல்க‌ள் என்று இல‌க்க‌ற்ற‌ எண்ண‌ற்ற‌ பேச்சு... பேச்சு... மேலும் பேச்சு மட்டுமின்றி எழுத்தில் சொல்லிவிட தீராத‌ உன்ன‌த‌ங்க‌ள்.

••••••

இங்கே எழுத‌ப‌ட்டிருப்ப‌வை ஒரு ப‌ய‌ண‌க் க‌ட்டுரையோ, க‌ட்டுரையோ, குறிப்புக‌ளோ அல்ல‌து வேறு சிலவோ கிடையாது. என் ம‌ன‌தில் நான் பூசிக் கொண்ட‌ எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள். எண்ண‌ங்க‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும் உயிரோடையில் தொட‌ரும். தொட‌ர்ந்து வாசியுங்க‌ள்.

••••••

எனக்குப் பிடித்த கவிதையொன்று :

மனமொளிர் தருணங்கள்
தளர்ந்து இறுகும்
சிறகுகள் அசைத்து
கால் புதைய காற்றில்
நடக்கிறது ஒரு பறவை
என்னை நானே
அருந்தி இரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்த
பறவைச் சிறகின் கதகதப்பை
கைப்பற்றி
கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது
பறவை
உதிர்ந்த சிறகு குறித்த
கவலையேதுமற்று.
- 'அகநாழிகை' பொன்.வாசுதேவன்

6 comments:

தேவன் மாயம் said...

க‌ட‌ந்த‌ வார‌ம் சென்னை சென்று வ‌ந்த‌தில் மிக‌ புதிய‌ அனுப‌வ‌ங்க‌ள். உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ள். என் மான‌சீக‌ குரு ம‌னுஷ்ய‌ புத்திர‌னை ச‌ந்தித்தோம். க‌ட்ட‌ற்ற‌ காட்டாறு போன்றிருந்த‌து அவ‌ர் பேச்சை. எந்த‌ எடுத்து த‌ந்தாலும் அதில் இருந்து பேசினார். சுந்த‌ர‌ராம‌சாமி முத‌ல் சுஜாதா வ‌ரை. உட‌ன் இருந்த‌ 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா மூவ‌ரும் அவ‌ருட‌ன் நிறைய‌ நேரம் பேசினார்க‌ள்///

நண்பர் அகநாழிகையுடன் கழிக்கும் தருணங்கள் மிக அருமையாக அமைவதில் வியப்பில்லை..

யாத்ரா said...

நிகழ்வுகளை மிக அழகாக கோர்த்திருக்கிறீர்கள். அகநாழிகையின் அருமையான கவிதை இன்னமும் அந்த கடற்கரைக் காற்றில் உலவிக் கொண்டிருக்கிறது.

Gowripriya said...

எண்ணங்களும் வண்ணங்களும் அருமை... கவிதை அற்புதம்.. பகிர்தலுக்கு நன்றி

நிலாரசிகன் said...

//இல‌க்கிய‌த்துவ‌மும் ஒரு அழ‌கிய‌லும் இல்லாத‌ பெய‌ர் போன்றிருப்பதாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ முடிவு.//

ஊரை பற்றி எதற்கு கவலைப்படவேண்டும்? அழகியலும் இலக்கியத்துவமும் பெயர்களில் தேவையில்லை என்பதே என் கருத்து. இளங்கோ பெரும்கவி. அவன் பெயரில் என்ன அழகியல் இருக்கிறது?
என் மனதில் பட்டதை சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.
உயிரோடையில் உயிரோட்டமுள்ள படைப்புகள் வெளியாக வாழ்த்துகள்.

மதன் said...

அழகான புதுப் பெயருக்கு வாழ்த்துக்கள்.. பதிவுலக நண்பர்களுடன் நல்லபடியாக பொழுதைக் கழிக்கிறீர்கள்.. சென்னையில் இல்லாததால் எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை!

உயிரோடை said...

வாங்க தேவன்மயம். நன்றி.

நன்றி யாத்ரா.

நன்றி கௌரிப்ரியா.

நன்றி நிலாரசிகன்.

நன்றி மதன்.