என்னோட எல்டிஎ இரண்டு வருசமா டூயூ இந்த வருசம் அவைல் பண்ணலேன்னா எக்ஸ்பெயர் ஆயிடும் என்று அடிக்கடி நச்சரித்தார் என் கணவர். நான் இப்போ தானே புது வேலை சேர்ந்திருக்கேன் என்று தட்டி கழித்து வந்தேன். தினமொரு முறை 5 ஸ்டார் ஹோட்டலில் வேற தங்க எலிஜிபிலிடி இருக்கு.. இப்படி அடிக்கடி புலம்பலுக்கு முடிவு கட்ட மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் நான்கு நாள் மும்பை போகலாம் என்று முடிவாயிற்று.
ஒரு வழியாக மும்பை கிளம்ப வேண்டிய சுபயோக சுபதினத்தில் சாயுங்காலம் 4.45க்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி, ஒரு சேர் ஆட்டோவில்("என்னது ஏர்போர்ட்க்கு ஆட்டோவில் அதுவும் சேர் ஆட்டோலயா?" அப்படீங்கிறவங்களுக்கு எங்க அலுவலகம் இருப்பது ஹரியானாவில் நான் போக வேண்டியதோ தில்லி ஏர்போர்ட்க்கு. நேரடியாக ஆட்டோ கிடைக்காது. ஹரியானா தில்லி பார்டரில் தான் தில்லி செல்லுவதற்கான ஆட்டோ கிடைக்கும். சென்ற முறை சென்னை செல்லும் போது அழகா என் அலுவலகத்திலேயே சொல்லி ஒரு டாக்ஸி புக் செய்து எளிதாக 25 நிமிடத்தில் ஏர்போர்ட் அடைந்து விட்டேன். இந்த முறை மறந்தது மட்டும் அல்லாமல் கிளம்பும் போது தான் பார்த்தேன் கையில் இருந்தது 150 ரூபாய் மட்டும். அது பாருங்க இந்த ஏடிஎம், டெபிட் கார்ட் எல்லாம் வந்ததிலிருந்து கையில் காசு வைத்திருப்பதென்பது மிக குறைவு. அதனால் ஆட்டோவில் போகலாம் என்று கப்பசடா பார்டரில் ஒரு ஆட்டோகாரரிடம் எனக்கு 6.15 ஃப்ளைட் சீக்கிரம் போக வேண்டும் என்றது தான் குறை அவர் டைம் அவுட் வைத்து ஓட்டுகின்றேன் பேர்வழி என்று, ஆட்டோவை ஓட்டோ ஓட்டென்று ஓட்டி 5.40க்கு விமான நிலையம் சேர்த்தார். ஏனோ அன்று விமான நிலையம் வரும் வழி, விமான நுழைவாயில் என்று என்றுமில்லாத வாகன கூட்டம். அது மட்டுமில்லாது உள்ளே செல்ல வெளியிலிருந்தே பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நிற்பதை விட பெரிய கூட்டம் நின்று கொண்டு இருந்தது. நல்ல வேளையாக அவர் முன்னமே போய் போர்டிங் பாஸ் வாங்கி இருந்தார். மேலும் வாயில் அருகே வந்து காவலரிடம் கேட்டு என்னை வரிசையில்லாமல் உள்ளே அழைத்து சென்று விட்டார். அப்புறமும் க்யூ விட்டபாடில்லை. செக்குரிட்டி செக்கிலும் அவ்வளவு பெரிய வரிசை. திருச்சி பஸ் நிலையத்தில் 3 அல்லது 4 நாள் விடுமுறைக்கு பின் சென்னை திரும்ப நிற்கும் கூட்டம் போலிருந்தது அந்த கூட்டத்தையும் கூச்சலையும் கேட்கும் போது. ம்ம் இந்தியாவின் சராசரி மனித வாழ்வின் தரம் உயர்கின்றது. :) ஒரு வழியாக 30 நிமிட தாமதத்துடன் மட்டும் மும்பை வந்திருங்கியது விமானம். விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சொன்னார் நாம் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் பெரும்பாலும் எவ்வளவு நேரம் விமானம் பயணிக்கின்றதோ அதை விட அதிக நேரம் தரையிறங்க ஆகுமென்றார். அங்கிருந்து ஹோட்டல் வந்து இரவு விருந்துண்டு உறங்கி விட்டோம்.
மறுநாள் எழுந்து காலையில் சாண்டகுரூஸ் ரயில்நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் சென்று இறங்கினோம் மீட்டரில் 18 ரூபாய் வந்திருந்தது. ஆட்டோகாரர் மீட்டரில் 18 என்றால் 17 ரூபாய் தான் வாங்குவோம் என்றார், அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று வியந்து போனேன்.(முதல் நாள் விமான நிலையத்திருலிருந்து ஜுகுவிற்கு 140 ரூபாய் வாங்கிட்டான் அந்த டாக்ஸிகாரன் என்று என் வீட்டுகாரர் புலம்பியதில் ஆச்சரியமில்லை என்று தெரிந்தது, எனக்கு மும்பை முதல் முறை அவர் ஐந்தாறு முறை வந்திருக்கின்றார்.) கேட் வே ஆப் இந்தியா போக சர்ச்கேட் ரியல் நிலையத்திலிருந்து டாக்ஸியில் 15 ரூபாய் தான் மீண்டும் வியப்பு தான்.(சென்னை ஆட்டோகாரர்கள் நினைவு வந்தால் வியப்பாக இருக்காதா என்ன) இது தான் கேட் வே ஆப் இந்தியா, அது தான் தாஜ் ஹோட்டல் போகலாமா என்றார். அப்படியே இரண்டு, மூணு போட்டோ எடுத்துட்டு மீண்டும் ரயில் ஏறினோம். அங்கிருந்து தாதரில் இறங்கி ஆரோரா தியேட்டர் போனோம். அங்கே தமிழ் படம் ஓடுமாம் போனால் சிலப்பாட்டம் ஓடிக்கொண்டு இருந்தது ஓடியே வந்துட்டோம். "ரத்னா அவங்க இங்க தான் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போகலாமா" என்றார். சரி என்றதும் ஹோட்டல் சென்று கொஞ்சம் புதிதாகி(fresh ஆகி) மீண்டும் ரயில், கந்திவெளி சென்று தக்கூர் கிராமம் என்ற மும்பை புறநகரில் மிக பணக்கார கிராமத்தை அடைந்தோம். அங்கே செலென்ஜர் டவரில் ரத்னா மனோகர்(எங்க குடும்ப நண்பர்கள் நீண்ட நாட்களாக ஃபரிதாப்தில் இருந்தார்கள் கொஞ்ச நாள் முன் மும்பை மாற்றலாகி வந்தார்கள்) வீட்டுக்கு சென்றோம். வழக்கம் போல உபசரிப்பு, பேச்சு, சிரிப்பு என்று கொஞ்சம் நேரமில்லை கிட்டதட்ட ஐந்து மணி நேரம் போனதே தெரியலை. அவர்களோடு டின்னர் முடித்துவிட்டு மீண்டும் ஜுகு கிளம்பினோம். ரத்னா கொஞ்சம் என்னை போலவே நகைச்சுவையாக பேசுவார்கள். உதாரணத்துக்கு ஒரு சில, "என்ன ரத்னா செல்ப்ல ஒரே இன்கிலிஸ் புக்ஸா இருக்குன்னு" கேட்டதுக்கு "கவுண்டமணி ஒரு படத்தில சொல்லுவாரு நாங்க எல்லாம் எஹுகேட்டு ஃப்மலின்னு அதை காட்டிக்க தான்", என்றார்கள். இன்னுமொன்று "பாம்பேல வேலைகாரி ரொம்ப நல்லா வேலை செய்வாங்க ஒரு ஒரமா யாராவது உக்கார்ந்து இருந்தா அவங்களை கூட சூப்பரா துடைச்சி சுத்தம் செய்துட்டு போயிடுவாங்க." மேலும் ஒண்ணு "ஃபரிதாபாதிலிருந்து வரும் போது நிறைய சாமான்களை டிஸ்போஸ் செய்து விட்டு வந்தேன். இவரை(அவர் கணவரை) தான் ஒன்னும் செய்ய முடியல"(டைமிங்கோட சொல்லி பாருங்க கண்டிப்பா சிரிப்பு வரும்)
இரண்டாம் நாள் காலையில் எழுந்து அதே ரயில்(அதெப்படின்னு மொக்கை போடாதீங்க, அதேன்னா அதே இல்லை), அதே தாதர் நிலையம், மீண்டும் டாக்ஸி இப்போது போனது சித்தி விநாயகர் கோவில். அங்கே அருகம்புல் ஒரு கொத்தோடு ஒரு செம்பருத்தியை வைத்து கட்டி ஒரு சிறு பொக்கே போலவோ விற்று கொண்டிருந்தார்கள். அதே மாலையாகவும் கிடைத்தது. பார்க்க மிக அழகாக இருந்தது. இரண்டு மாலை வாங்கி விநாயகருக்கு கொடுத்து, வணங்கி விட்டு அங்கிருந்து மஹாலஷ்மி கோவிலுக்கு போனோம், பெரிய வரிசை(கிட்டதட்ட 2 கிமி தூரம் மக்கள் வெள்ளம்) அதனால் அங்கிருந்து அப்படியே யூ ட்ர்ன் அடுத்து மடுங்காவுக்கு தமிழ் சாப்பாடு கிடைக்கும் என்று சொன்னதால் வந்தோம். அங்கே நிறைய தமிழ் கோவில்களும் இருந்தது. ஆனால் மதிய வேளை என்பதால் எல்லாம் மூடி இருந்தது. மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட் வே ஆப் இந்தியா போய் எலிபெண்டா கேவ் போகலாம் என்று முடிவெடுத்து அங்கே போய் ஒரு படகில் கிட்டதட்ட ஒன்றறை மணி நேரம் கடலில் அங்கே மிதக்கும் கப்பல்,படகுகள் இதெல்லாம் பார்த்தபடி போய் ஒரு தீவில் இறங்கி அங்கே விற்கும் இலந்தை பழம்,மாங்காய் இத்தியாதி இத்தியாதியை வாங்கி உண்டு இரண்டு நிமிடம் ரயிலில்(மாதிரி) போய், 20 நிமிடம் நடைபாதை கடைகளை ரசித்தவாறு ஒரு மலை மேல் ஏறி அங்கே இருக்கும் குரங்குகளின் அட்டகாசத்திலிருந்து தப்பி அங்கிருக்கும் சுமாரான ஒரு குகை கோவிலை தரிசித்துவிட்டு இஷ்டபடி புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் வந்த வழியே வந்து விடுதியை அடையும் போது இரவு உணவிற்கான நேரம் வந்திருந்தது. அதனால் உண்டு விட்டு ஜூகு கடற்கரை (கடற்கரைக்குறிய எல்லா அடையாளங்களும் கூடாவே நிறைய குப்பைகளும் இருந்தது, மும்பை மாநகராட்சி இதை கொஞ்சம் சுத்தம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்) சென்று வந்து உறங்கியாகிவிட்டது.
மூன்றாம் நாள் மும்பை சுற்றி காட்டும் ஒரு பேருந்தில் சென்றோம். பேருந்தில் ஒரு வழிகாட்டி மிக நகைச்சுவையாக மும்பை மாநகரை பற்றி கூறிக் கொண்டு வந்தார். ஒரு கட்டிடத்தை காட்டி அது தான் சஞ்ஜய்தத்தின் மாமியார் வீடு என்றார், அப்புறம் அதை அப்படி தான் கிண்டலாக கூறுவோம் அது மும்பை உயர்நீதி மன்றம் என்றார். அடுத்து ஒரு விளையாட்டு மைதானத்தை காட்டி அதற்கு பெயர் காந்தி மைதானம் என்றும் காரணம் அதில் புல் இல்லாமல் மொட்டையாக இருப்பதால் என்றார். :) நீங்கள் இறங்கும் போது பணம்,நகை, பாம்(வெடிகுண்டு) போன்ற விலை உயர்ந்தவைகளை கூடவே எடுத்து சென்றுவிடுங்கள், சாப்பிடும் ஐட்டம் மட்டும் விட்டு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கின்றேன் என்றார். :) மும்பை தரிசனில் பிடித்தவை தொங்கும் தோட்டம்(ஆனால் உண்மையாக தோட்டம் தொங்கவில்லை நீர்தொட்டி மேல் அமைந்து இருப்பதால் அந்த பெயர் காரணமாம்), பூட் ஹவூஸ், மெரைன் டிரைவ் சாலை, மஹாலஷ்மி கோவில், அட்ரா மாலில் காட்டப்பட்ட 4டி காட்சி, அனுஜன்யா அண்ணாவை சந்தித்தது.(பாவம் அனுஜன்யா, ஹேங்கிங் கார்டனில் இருந்து, மஹாலஷ்மி கோவில் வரை எங்கள் பேருந்தை தொடர்ந்து தொடர்ந்து ஒரு வழியாக சந்தித்து, ஓட்டத்தோடு ஓட்டமாக மஹாலஷ்மியை தரிசித்து, கொஞ்சம் பேசி, மஹாலஷ்மி கோவிலிருந்து அட்ரா மால் வரை கொண்டு வந்து விட்டார். என்னிடம் பேசியதை விட என் வீட்டுகாரரிடம் அதிகம் பேசினார். அனு அண்ணியும் தொலைபேசினார்கள் என்னிடம்) 4டி சோவில் 3டியை விட கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது. படத்தில் பனி பெய்யும் போது தலை மேல் பனி பொலிந்தது. அங்கே தீ எரியும் போது நாற்காலியிம் பின்பக்கத்தில் ஊதாங்குழல் ஊதுவது போல ஒரு வித சத்ததோடு என்னவோ வந்தது.(நல்ல வேளை நிஜபனி போல நிஜ தீ வைத்து சுடவில்லை.) ஆனால் அடிக்கடி நாற்காலி முன்னும் பின்னும் ஆடி யாரோ நம்மை அடிப்பது போல இருந்தது. மற்றபடி கண்டிப்பாக 4டி சோ பார்க்கலாம். நல்ல வித்தியாசமான பொழுது போக்கு. அங்கிருந்து நேரு அறிவியல் கூடம் சென்றோம் நிறைய விசயம் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பதை போல இருந்தது. சத்தம், சங்கீதம் பற்றிய தொகுப்பிடத்தில் வெர்சுவல் ரியாலிட்டி என்ற இடத்தில் நாம் நடனமாடினால் அதற்கு தகுந்த இசை ஒலிக்கிறது.(பெரிய கம்ப விசித்திரமில்லை எல்லாம் மென் பெருளே, ஒரு சில இசைகருவிகள் அந்த இசை கருவி மீது நம் நிழற்படம் விழந்தால் ஒலிக்கின்ற மாதிரி செய்து இருக்கின்றார்கள். ஆனால் ரசிக்கும் படி இருக்கின்றது) மேலும் சிலது அந்த பகுதியில் நன்றாக இருந்தது. ஒரு பியானா போன்ற கருவியில் நடந்தால் இசை வந்தது. அதன் பின் பேருந்து ஜுஹு கடற்கரை சென்றதால் நாங்கள் இடையில் இறங்கி மீண்டும் மடுங்கா சென்ற முதல் நாள் விட்டு போயிருந்த கோவில்களை பார்த்துவிட்டு இரவு உணவை முடிந்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.
நான்காம் நாள் காலை எழுந்து தில்லி திரும்பும் ஆயத்தத்தில் ஆழ்ந்தோம். வரும்போது இருந்த தில்லி விமான நிலைய நெரிசலை மனதில் கொண்டு இரண்டு மணி நேரம் முன்னமே விமான நிலையத்தை அடைந்தால் என்ன ஆச்சரியம், நுழை வாயிலில் கூட்டமே இல்லை. போர்டிங் பாஸ் வாங்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆயிற்று. செக்குரிட்டி செக் பத்தே நிமிடத்தில் முடிந்தது. நல்லவேளை கையில் சுஜாதாவின் ஓரிரு எண்ணங்கள் புத்தகம் இருந்ததால் பொழுது போனதே தெரியவில்லை. விமானமும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னமே கிளம்பி சரியான நேரத்தில் தில்லி வந்திறங்கியது. ஒரு டாக்ஸி பிடித்து இல்லம் வந்து சேர்ந்தோம். கைபேசியை உயிர்யுட்டியில் இணைத்துவிட்டு, எஸ் எஸ் முசிக்கில் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" பாட்டை கேட்டதும் வீட்டிக்குள் வந்து விட்டது மனமும்.
பயணத்தில் திரும்பும் போது எடுத்து சென்ற சூட்கேஸ் நிறைய அழுக்கு துணிகளும்..., தினசரி சிடுசிடுப்பும்,சலிப்புமில்லாத சற்றே அதிக நேரமும், தில்லி வந்திருக்கிய விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு பயணித்த பேருந்தில் என் கையசைப்பிற்கு என்னை பார்த்து மலர்ந்து சிரிந்த ஒரு குழந்தையும், பக்கத்து இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக "எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்" என்ற வயதான பாட்டியும் கவிதையாகி இருந்தன(ர்). :)

17 comments:
//"கவுண்டமணி ஒரு படத்தில சொல்லுவாரு நாங்க எல்லாம் எஹுகேட்டு ஃப்மலின்னு அதை காட்டிக்க தான்", என்றார்கள். //
நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள்..
>>மலர்ந்து சிரிந்த ஒரு குழந்தையும், பக்கத்து இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக "எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்" என்>>
சந்தடி சாக்கில் இப்படி 'அழகான' பொய் சொல்லக் கூடாது நீங்கள் !
அவ்வ்வ்வ்.......
எழுத்துப் பிழைகளை எல்லாம் கொஞ்சம் பாருங்க..ரொம்ப உறுத்தற மாதிரி இருக்கு..
நல்ல மொக்கை!
நல்ல, சுவாரஸ்யமான பதிவு. எல்லாக் கணவர்களைப் போலவே 'அவர்'ரும் நல்லவராக, 'பாவமாக' இருக்கிறார் :))))
அனுஜன்யா
நன்றி நர்சிம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்று அறிவன் அவர்களே. எழுத்துபிழைகளை திருத்தி இருக்கின்றேன். மேலும் இருந்தாலும் கூறுக.
நன்றி சிபி
அண்ணா,
என்ன இது என்னை பார்த்தால் பாவமாக நல்ல பெண்ணாக தெரியவில்லையா?
//நல்ல, சுவாரஸ்யமான பதிவு. எல்லாக் கணவர்களைப் போலவே 'அவர்'ரும் நல்லவராக, 'பாவமாக' இருக்கிறார் :))))
//
ஆமாம்! எனக்கும் அப்படித்தான் தோன்றியது!
//இவரை(அவர் கணவரை) தான் ஒன்னும் செய்ய முடியல"(டைமிங்கோட சொல்லி பாருங்க கண்டிப்பா சிரிப்பு வரும்)//
over ithellam over...
rangamanigal kazagam sarbil ithaik kandikkirEn
silambaattam pakkamal thirumbiya akkaavirkku kaNdanangal.
simbu kolaiveri rasigar manRaththin
adi muttal thondanin thozan
bangalore kilai
இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக "எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்" என்ற வயதான பாட்டியும் கவிதையாகி இருந்தன(ர்). :)///
மேலே உண்மையாவா அப்படிச் சொன்னாங்க அந்தப் பாட்டி ? இருக்கலாம் கண்ணாடி துடைச்சு இருக்க மாட்டாங்க :))
மத்தபடி
எங்களுக்கு எல்.டி.ஐ எக்ஸ்பயர் ஆகாது. ஆனா டாக்ஸ் பிடிச்சுடுவாங்க.
நல்லாருக்கு . அடுத்து எந்த ஊர்க்கு போகப் போறீங்க ?
//அண்ணா,
என்ன இது என்னை பார்த்தால் பாவமாக நல்ல பெண்ணாக தெரியவில்லையா?
//
இல்லை!
என்னைப் பத்தியும் நல்லா இருக்கே!
நல்லா இருப்பே!
சரளமான நடை....
Well written travalogue, அங்கங்கே சில சின்னப் பொய்கள் தென்பட்டாலும் :)
பாராட்டுக்கள் மின்னல் !
அனுஜன்யாவின் கமெண்டில் அவரது கஷ்டம் புரிகிறது. இருக்கறதுதான். நாங்கள்லாம் பொலம்பீட்டா இருக்கோம்... ஹூம்!
சிபி நீங்க எப்போ என் வீட்டுகாரரை பார்த்தீங்க? இப்படி யார் எதை சொன்னாலும் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணலாமா?
ஜீவ்ஸ் கருத்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றி
சிபி பக்கத்து ஊர்க்காரியை இப்படி பகைச்சிக்க கூடாது. நாளை முன்ன சப்போர்ட்க்கு ஆள் வேணாமா?
பாலா வாங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அட பரிசல் சார் வாங்க முதல் வரவு நல்வரவாகுக. ஆனா கட்டுரை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.... :)
ஒரு போட்டோ கூட கண்ணுல காட்டல :(
பெரிய பாராவ ஒடச்சு பீஸ், பீஸா பீட்சா மாதிரி போட்டா நல்லா இருக்குமே :)) ஸ்ஸ் கண்ணக் கட்டுது.
எல்லாரும் சொன்ன மாதிரி, நல்ல எழுத்து நடை. நாமும் போன மாதிரி ஒரு ஃபீலிங் ...
உங்களுக்கு தனியா போட்டோஸ் அனுப்பி வைக்கிறேன் முத்துலெட்சுமி.
நன்றி சதங்கா.
Post a Comment