அசோகமித்திரனின் "மானசரோவர்". மிக எளிமையான கரு(ஒன் லைனர்) ஆனால் 207 பக்கங்களாக ஒரு நாவலில் சொல்லி இருக்கின்றார். ஒரு துப்பறியும் கதைக்கான விறுவிறுப்பு இருக்கின்றது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே முடிச்சு அவிழ்க்கப்படுகின்றது. அதுவும் முழுமையாக சொல்லாமல் வாசகர் முடிவுக்கு விட்டுவிட்டார் அகோகமித்திரன்.
ஒரே மூச்சில் படித்து முடிக்க கூடிய சுவாரஸியமான அதே சமயம் மிக எளிமையான மொழியில் அமைந்திருக்கும் நடை. 40 நிமிடங்களில் 80 பக்கங்கள் வாசித்துவிட முடிகின்றது. நாவலில் இரண்டு கதை சொல்லிகள். அவர்களை சுற்றி பல கதாபத்திரங்கள். கொஞ்சம் சினிமா. கொஞ்சம் சூப்பர் பவர். மிக அருமையாக நகர்ந்திருக்கின்றது கதை.
கோபால்ஜியின் மகன் இறந்து, மகள் புக்ககத்தில் ஏதோ கொடுமை அனுபவிப்பவளாக காட்டி, மனைவிக்கு பைத்தியம் பிடித்து என்று ஒரு குடும்பமே சின்னாபின்னமாகிறது. அதற்கு இதுதான் காரணமென்று இறுதியில் பட்டும்படாமலும் விளக்கி இருக்கின்றார். சத்யன் குமார் ஒரு திரைப்பட நடிகர் கோபால்ஜியை மிகவும் மதிப்பவர் இறுதியில் இவர் தான் கோபால்ஜியின் கஷ்டங்களுக்கான முடிச்சினை அவிழ்க்கிறார்.
இந்த இரு கதைசொல்லிகளும் முதலில் ஒருவரும் பின்பு அடுத்தவரும் என்று மாறி மாறி கதை சொல்கின்றார்கள். ஒருவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் அடுத்த அத்தியாயத்தை உடனே படிக்க தூண்டும் வண்ணமிருக்கும் ஒரு முடிச்சு. ஒரு கதை சொல்லியின் பங்கு முடிந்ததும் அடுத்த கதை சொல்லி ஆரம்பிக்கும் போது முதல் கதைசொல்லியின் கதையே நீடிக்க கூடாதா என்ற எண்ணம் வருகின்றது. இதே எண்ணம் இரண்டாம் கதை சொல்லி கதை சொல்லி முடிக்கும் இடத்திலும் வருகின்றது.
காமாட்சிக்கு என்ன பிரச்சனை, சியாமளாவின் வாழ்க்கை இப்படி சில விசயங்கள் மட்டுமே சொல்லப்படாமல் இருக்கின்றன. அவற்றை கூட நாமே ஒரு விதமாக யூகித்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட புத்தகங்கள் மேலும் சிறந்தவற்றை வாசிக்க தூண்டுகின்றன. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
மானசரோவர் (நாவல்)
- அசோகமித்திரன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை:125 ரூபாய்
6 comments:
//காமாட்சிக்கு என்ன பிரச்சனை, சியாமளாவின் வாழ்க்கை இப்படி சில விசயங்கள் மட்டுமே சொல்லப்படாமல் இருக்கின்றன. அவற்றை கூட நாமே ஒரு விதமாக யூகித்துக் கொள்ளலாம்//
உண்மைதான். கண்முன் அந்த பாத்திரங்களை நிழலாடவிட்ட எழுத்துக்கள் என்றே சொல்லவேண்டும். இறுதிவரை ஒருவலியை இனிமையாக கொண்டுசென்ற விதமும், இறுதியில் அதன் முடிச்சினை பட்டும்படாமல் முடித்தவிதமும் மிகவும் ரசிக்கவைத்தது. சென்றவாரம்தான் படித்தேன்.
thanks for the intro. :)
"இப்படிப்பட்ட புத்தகங்கள் மேலும் சிறந்தவற்றைவாசிக்கதூண்டுகின்றன."
அறிமுகத்திற்கு நன்றி.
நீங்கள் சொல்லும் புத்தகத்தை போலவே அழகாக வேகமாக நகர்கிறது உங்களின் விமர்சனமும், படிக்கும் மனமும்...
நல்ல அறிமுகம் ‘, தொடர்ந்து எழுதுங்கள்.
வாங்க க.பாலாஜி மிக்க நன்றி.
வாங்க ஆர்விசி. மிக்க நன்றி.
வாங்க மாதேவி. மிக்க நன்றி.
வாங்க கமலேஷ். மிக்க நன்றி.
வாங்க அகநாழிகை. மிக்க நன்றி.
Post a Comment