எங்கள் வீட்டு தோட்டத்தில் மிகப் பெரிய வேப்ப மரமிருக்கிறது. சுமார் ஒரு ஏழு வருடத்திற்கு முன் எனது கை அளவிற்கே ஒல்லியாக இருந்த இந்த மரம் தற்சமயம் என்னை விட குண்டு பெண்ணாகி விட்டது. எங்கள் வீட்டு மாடிக்கு மேல் வளர்ந்து விட்டது இந்த மரம். வேப்பமரம் வைத்த காரணமே எங்கள் வீடு சாலையிலேயே அமைந்திருப்பதாலும் அதில் தொடர்ந்து கன வாகனங்கள் புழுதியை அள்ளி இறைத்த படி செல்வதால் வீடு புழுதியாகி விடுவதை சற்றேனும் தடுக்கலாம் என்ற எண்ணமே.
இந்த வேப்ப மரம் அடர்ந்து வளர்ந்து கண்ணுக்கு எவ்வளவு குளுமையாக இருக்கிறது என்று அருகிருந்து பார்ப்பவர்க்கு மட்டுமே தெரியும். இடையிடையே கண்ணாமூச்சி ஆடி சிரிக்கும் சூரியனும் மறைந்து மறைந்து பொழியும் மழையும் எத்தனை அற்புதமாக இருக்கும். இந்த மரம் சில அணில்களுக்கும், பல காகங்கள், குயில்கள் மயில்(எங்க வீட்டுக்கே மயில் வரும் நம்புங்க) இவற்றின் குதூகலத்துக்கும் குரலுக்கும் அடித்தளமாக அமைந்திருந்தது.
வீட்டுக்கு முன் செல்லும் மின்சார கம்பிகளில் வேப்பங்கிளைகள் மோதுவதாக மின்சார ஊழியர்கள் வந்து இரண்டு மூன்று பெரிய கிளைகளை வேப்ப மணம் மணக்க வெட்டி சாய்த்துவிட்டனர். பழைய வேலைக்காரி வேப்பங்கிளைகளின் மேல் கண் கொண்டிருந்தாள் வெட்டியது தான் தாமதம், சிலரை அழைத்து வந்து வெட்டப்பட்ட அத்தனை கிளைகளையும் அள்ளிக் கொண்டு போய்விட்டாள். தற்சமயம் வீட்டை விட்டு வெளியே வந்தால் சூரியனும் மழையும் நேரடியாக தெரிகின்றன.
"கூரை எரிந்து போனது
நிலவு தெளிவாக தெரிகின்றது"
என்றொரு ஹைக்கூ கவிதை இருப்பதாக கற்றதும் பெற்றதுமில் சுஜாதா எழுதியதைப் படித்திருக்கிறேன்.
வீட்டுக்கு அருகில் இருக்கும் சில தெருக்களில் மக்கள் தாங்களே அமைத்துக் கொள்ளும் வேகத் தடைகளை கடக்கும் போது என்னவர் சொல்வார் "இது எல்லாம் தேசிய செலவீனம்(நேசனல் வேஸ்டேஜ்)". அவர் அப்படி சொல்ல காரணம் இந்திய அரசு அதிக விலைக்கு பெட்ரோலிய கச்சா பொருள் வாங்கி செலவு செய்து பெட்ரோல் செய்து மிக குறைந்த விலைக்கு விற்கிறது. எண்ணை நிறுவனங்கள் பெரும்பாலும் அரசின் நட்ட கணக்கு பாகத்திலேயே வருகின்றன. அப்படி இருக்க பத்தடிக்கு ஒரு வேகத்தடை வாகனத்தின் பெட்ரோல் செலவினை அதிகரிக்கும். அதுவும் தெருக்களில் போடப்படிருக்கும் வேகத்தடை விதிப்படி சீராக கொஞ்சம் தொலைவிலிருந்து ஏறி இறங்கி இருக்காது. கொக்கு மாக்காக சுவர் போல் எழுப்பி இருப்பார்கள் ஏறித் தான் குதிக்க வேண்டும். என்னவர் எண்ணை நிறுவனர் ஆயிற்றே இதற்காக அலுத்துக்கொள்வார்.
சென்ற வாரம் நேர்முக தேர்வொன்றுக்காக டெல்லி வரை செல்ல வேண்டி இருந்தது. இந்திய சாலைகளில் முக்கால்வாசி குண்டும் குழியுமாக வழி வார்ப்பதை விட்டு வழி மறிப்பதையே வேலையாக கொண்டிருப்பவை. அதுவும் டெல்லியின் தொடர்மழை காரணமாக குண்டும் குழியும் மிக அதிகமாக இருந்தன விழுந்து எழுந்து சென்று கொண்டிருந்தோம். தெருவில் வேகத்தடைக்கே "நேசனல் வேஸ்டேஜ் என்பீர்களே இதை என்ன சொல்வது" என்றேன். இது "கொலைக்குற்றத்திற்கு இணையானது" என்றார். ஆம் அவர் சொல்வது சரி தான் அந்த சாலையில் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன? இத்தனை குண்டும் குழியுமாக எத்தனை சாலைகள் இருக்கின்றன? மொத்த பெட்ரோலிய கச்சா எண்ணை இருப்பு என்ன? ம்ம் நாட்டை ஆள்பவர்கள் கொஞ்சமேனும் யோசிப்பார்களா அல்லது காமன் வெல்த் மட்டும் சேர்த்துக் கொண்டு இருப்பார்களா? அந்நியன் விக்ரம் போல் யாராவது வந்தால் தான் என் தாய்த்திரு நாட்டை காக்க முடியும். ஹூம்ம்ம்ம்.
11 comments:
வெட்டப்பட்ட வேப்ப மரம் - வருத்தம்.. :(
குண்டு குழியான தில்லியின் சாலைகள் - வெட்கம்....
காமன் வெல்த் - ஒரு சிலரின் வெல்த் மட்டுமே - காமன் வெல்த் ஒரு சாக்கு! - வேதனை...
பகிர்வுக்கு நன்றி .....
வெங்கட்.
அருமையான பகிர்வு. வேப்பமரக் காற்று அருமையாக இருக்கும். அதனடியில் உறங்கினால் அதை விட ஆனந்தமாக இருக்கும்.
நல்ல பதிவு......
அந்நியன் அவதரிப்பது
நம் கையில்தான் உள்ளது
தட்டி கேட்க்க ஒருவனிருக்க
அவனை எட்டி பார்க்கும்
ஏளன உலகமிது.......
நீங்களே வச்சீங்களா.. அதான் வருத்தப்படறீங்க..
முடிந்தவரை கிளைஇடிக்குது.. சாயுது .. க்குப்பையாகுதுன்னு காரணம் சொல்லி வெட்டத்தான் பாப்பாங்க இவங்க.. அப்பறம் வெயிலு வெயிலுன்னுபுலம்ப மட்டும் செய்வாங்க ..:(
ஆமாம் அதே தான் வேப்ப மரம் மணக்கிறது.டெல்லி சாலையும் அப்படியே.
உங்கள் படைப்பில் கவிதைகளையே, வாசித்த எங்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சியாகவும் , சமூக அக்கறை கொண்ட பதிவாகவும் இருப்பது பாரட்டுவதற்குரியதாகும் .
அருமையான பகிர்வு.
அழகாய் ஒரு பதிவு
நல்ல பதிவு......
சகஜமா நடக்கற விஷயம். நல்லா எழுதி இருக்கீங்க..
நன்றி வெங்கட் நாகராஜ்
நன்றி கோவை2தில்லி.
நன்றி தினேஷ்குமார்
நன்றி முத்துலெட்சுமி.
நன்றி காமராஜ் அண்ணா.
நன்றி தேவராஜ் விட்டிலன்.
நன்றி சே.குமார்.
நன்றி விநாயக முருகன்.
நன்றி கமலேஷ்.
நன்றி பிரேம்.
Post a Comment