Thursday, December 24, 2009

சுவீட் சுவீடன் - பகுதி 1

அலுவலகத்தில் நான் இணைந்த போதே கம்பெனியின் முதன்மை தொழிற்நுட்ப அதிகாரி(CTO) பணி நிமித்தமாக அடிக்கடி சுவீடன் செல்ல வேண்டி இருக்கும் உங்களுக்கு ஆட்சேணை எதுவும் இருக்கின்றதா என்று கேட்டு இருந்தார். நானும் இல்லை எனச் சொல்லி வைத்திருந்தேன். உடனே விசா பெற ஏற்பாடு செய்தார்கள். விசா வந்தது. கிட்டதட்ட விசா வந்து இரண்டு மாதம் பயணம் ஒன்றும் திட்டமிடப்படவில்லை. நானும் மறந்து போய் இருந்தேன். திடீரென ஒரு நாள் மடல் வந்தது: அடுத்த வாரம் உங்கள் பயணம் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தயாராகுங்கள் என்று. மடமடவென எல்லாப் பொருட்களையும் வாங்கி கொண்டே இருந்தேன்... கிளம்பும் நாள் வந்துவிட்டது.

அங்கே குளிர் -15 டிக்கிரி என்றதும் அதற்காக வாங்கிய ஜாக்கெட் போட்டால் அத்தனை கனமாக இருந்தது. எனக்கு அப்போதிருந்தே டென்ஷன் ஆரம்பித்து விட்டது. இத்தனை கனமான ஆடையை அணிந்து ஒரு மாத கால கடும் குளிர் பிரதேசத்தில் எப்படி காலம் கடத்த போகிறேன்று.

பயணநாளில் வீட்டிலிருந்து விமானம் வரை எந்த தடங்கலும் இன்றி (என்னுடன் இன்னும் இருவர் வந்ததால் எந்த கவலையும் எனக்கிருக்கவில்லை) 7 மணி நேரம் பயணத்திற்குப் பின் ஹெல்சிங்கி (ஃபின்லாண்ட்) வந்தடைந்தோம். விமானம் ஆப்கானிஸ்தானை கடக்கும் போது, ஒரு மலைத் தொடரில் பனி மூடி(வெள்ளை சிமெண்ட் கொட்டும் போது ஒரு வித புகையோடு கொட்டும் இடத்தை மூடுமே அது போல) இருந்ததது. பார்க்க மிக அழகாக இருந்தது. ஆனால் அது இமய மலையா என்ற சந்தேகம் இன்னும் நீங்கவில்லை. (அது இந்துகுஷ் மலையாம்)

ஹெல்சிங்கியில் வந்து பார்த்ததும் தான் தெரிந்தது வந்த மூவரில் இருவருக்கு முதல் விமானத்திலும், எனக்கு மட்டும் அடுத்த(5 மணி நேரம் கழித்து) விமானத்திலும் இடம் ஒதுக்கபட்டிருந்தது. கேட்டால் முதல் விமானம் நிறைந்து விட்டது என்றும் என் பயணத்தை மாற்ற முடியாதென்றும், அந்த விமானத்தில் யாராவது ஒருவராவது செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் அனைவரின் சாமான்களும் அந்த விமானத்தில் செல்லவதாகவும் தெரிந்ததால் என்னை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். அங்கே போய் அந்த விமான நிலையத்தில் காத்திருக்கின்றோம் என்று சொல்லிக் கிளம்பினார்கள்.

நான் தனியாக 5 மணி நேரம் வேறு கடத்த வேண்டும்; அத்துடன் அங்கே போய் எப்படி அவர்களை கண்டு பிடிப்பது, எங்கே இருப்பார்கள் என்று பல கவலை வாட்ட, கூடவே கனமான ஜாக்கெட் வேற இன்னும் படுத்த, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நல்லவேளை ஹெல்சிங்கி விமான நிலையத்தில் ஒய்-பைய் இருந்ததால் என் மடிகணினி மூலம் இணையத்தில் ஒரு வலம் வந்தேன். மாதவிபந்தல், தமிழ் உலா பாவை பதிவுகளை பார்த்தேன். நர்சிம், பரிசல், நுனிப்புல், அனுஜன்யா (வழக்கம் போல் பழைய பதிவு), மொழி விளையாட்டு என்று வழக்கமாக வலம் வரும் அனைத்து வலைப்பூக்களைப் பார்த்தும் ஒரு மணி நேரம் தான் கழிந்திருந்தது. மேலும் வலைமேய முடியவில்லை. பயண அலுப்பு வேறு. அப்படியே இருக்கையில் சாய்ந்து உறங்க முயற்சித்தேன் அதுவும் முடியவில்லை. அந்த 5 மணி நேரம் கழிப்பது பெரும் பாடாயிற்று.

ஒரு வழியாக அடுத்த விமானத்தை பிடித்து, ஸ்டாக்ஹம் விமான நிலையத்தை அடைந்தேன். (விமானத்தில் பக்கத்து இருக்கைகாரர் பொதுவாக பேச ஆரம்பித்து தொழில்நுட்பம் வரை பேசினார். என்னால் முடியவில்லை ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் பேசினேன் ஏதோ.) அங்கே சொன்னபடி என்னோடு வேலைபார்க்கும் உடன் வந்த நண்பர்கள் காத்திருந்தார்கள். அங்கிருந்து அனைவரும் கிளம்பி என்னை அக்லாவில் எனக்காக ஒதுக்கப்பட்ட கெஸ்ட் ஹவுசில் இறக்கிவிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடம்(சீஸ்தா) சென்றார்கள்.

9 comments:

வினையூக்கி said...

சுவீடன் அருமையான நாடு... இங்கு இருக்கும் காலம் உங்களுக்கு கண்டிப்பாக இனிதாக அமைய வாழ்த்துகள்

Unknown said...

கட்டுரை சுவராஸ்யமாக ஆரம்பிக்கிறது.5 மணி நேரம் கடத்த வேண்டும் என்பதில் உங்களை விட
எனக்கு ஒரு ”திகில்” இருந்தது.அந்த உடன் வந்த இரு பயணிகள் ஆணா பெண்ணா என்பதில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது.

வலைக்கு வந்ததற்க்கு ரொம்ப நன்றி.
LIC ஏஜண்ட்(அந்த காலத்து?) மாதிரி “for my sake take one policy" என்று பாலிசி பிடிப்பது போல் நான் ஒரு நல்ல வலை எழுத்தாளரைத் தேற்றி விட்டேன்.

நன்றி

anujanya said...

விறுவிறுவென்ற சுவாரஸ்ய பதிவு. வெளிநாட்டில் தனியே முதல் முறை செல்வது எனக்கும் செம்ம டென்ஷன் தந்த விஷயம். இங்க இருக்கும் ஹாங்காங் செல்வதற்கே கண்ணில் பூச்சி பறந்தது.

சீக்கிரம் தொடரவும். செந்தழல் ரவி கூட அங்கதான் இருக்காரு இல்ல?

//அனுஜன்யா (வழக்கம் போல் பழைய பதிவு),//
வர வர உன்னோட லொள்ளு அதிகமாகி விட்டது. பாரு, ஒரு நாளு நானும் டெய்லி ஒரு பதிவு போட்டு 'நானும் பிரபலந்தான்'னு நிருபிக்கிறேன். அவ்வ்வ்வ்வ்

அனுஜன்யா

ஆதவன் said...

ungal katturai migavum arumai.. thodarungal...

melum enadhu valaithalatthaiyum parungal..ungal karuthugalai pagirndhu kollungal..

www.thamizhstudio.com

மதன் said...

(சுவீடன் இப்போது) மின்னல் பக்கம்..!:)

எம்.எம்.அப்துல்லா said...

உங்க கூடவே வந்தமாதிரி இருக்கு :)

உயிரோடை said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினையூக்கி

நன்றி ரவிஷங்கர்

நன்றி அனுஜன்யா அண்ணா.

நன்றி ஆதவன்

நன்றி மதன்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எம்.எம்.அப்துல்லாஜி. மீண்டும் வாங்க.

மங்களூர் சிவா said...

nice starting

உயிரோடை said...

வாங்க மங்களூர் சிவா. நன்றி