அடுத்த வாரம் என்னுடைய கடைசி வார இறுதி அதனால் என் விருப்பப்படி மலை பனிசரக்கு போக எல்லோரும் முடிவெடுத்தார்கள். காலையில் கிளம்பும் போது தான் பார்த்தேன். என் பயணச் சீட்டை ஒரு சட்டையுள் வைத்து சேர்த்து துவைத்து விட்டு இருந்தேன். அதில் நான்கு பயணம் செய்ய தேவையான அளவு பயண சீட்டை அதில் இருந்தது. எப்படியோ அதன் துண்டுகளை சேகரித்து ஏதோ ஒரு நம்பிக்கையோடு வெளியே கிளம்பியாற்று. மெட்ரோவில் ஓத்துக் கொண்டார்கள் ஆனால் பேருந்தில் அதை குப்பைத் தொட்டியில் போட போனார் அதன் ஓட்டுனர். கெஞ்சி குத்தாடி அவரிடம் இருந்த பயணச்சீட்டு துண்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு நண்பரும் நானும் அடுத்த பேருந்தில் வருவதாக சொல்லிவிட்டு மற்றவர்களை அனுப்பிவிட்டு, சேர வேண்டிய இடம் தெரியும் என்பதால் அதே இடம் போகும் வேறு பேருந்துக்கு சென்றோம். அங்கே ஒரு ஆத்தா அங்காள பரமேஸ்வரி என் பயணச்சீட்டை ஒரு புன்னகையோடு ஏற்று கொண்டு நாக்கா ஸ்ரண்டு அழைத்துச் சென்றாள்.
ஆனால் இறங்கிய உடனேயே தெரிந்து விட்டது அந்த இடம் இதற்கு முன் வந்த இடமில்லை. கூட வந்த நண்பர் சுவீடனுக்கு புதிது. என்னிடம் கைபேசி இல்லை. உடன் இருந்த நண்பர் தான் மற்ற நண்பர்களிடம் பேசினார். அவர்கள் சொன்னதாக சொல்லி என்னை நீண்ட தூரம் அழைத்து சென்றார் அவர் நம்பிக்கையாக நடந்து கொண்டு இருந்தார். சரி அவரிடம் அவர்கள் சரியாக சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நீண்ட தூரம் நடந்த பின் தான் தெரிந்தது ஒரு வேளை தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ என்று. எனக்கு ஒரே பயமாகிவிட்டது. ஒரு குழுவாக வந்தோம் நம்மை காணாமல் அவர்கள் தவித்து போவார்கள். அவர்கள் நேரமும் நம்மால் விரயமாகும் என்று நினைவே என்னை வாட்டியது.
அந்த இடம் மிக அழகாக இருந்தது. ஒரு ஏரி இருந்தது. அதில் நீருற்று இருந்தது. அழகான சிலைகள் இருந்தன. பனி போர்த்த சிறு குன்றுகள் என்று எல்லா இடமும் நன்றாக இருந்தது. ஆனால் நான் தான் கவலையில் எதையும் ரசிக்கவில்லை. உடனிருந்த நண்பர் ஏன் பயம் நானிருக்கேனில்லை என்றார். எனக்கு பயமில்லை ஆனாலும் இப்படி ஆகிவிட்டதே ஒரு பயணச்சீட்டு எடுத்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் பேருந்திலிருந்து இறங்கிய இடம் வந்து அங்கே ஒரு கடைகாரிடம் விசாரித்தால் போக வேண்டியது நாக்கா ஃபோரம் என்று தெரிந்தது. ஒரு பயணசீட்டு தரும் இயந்திரத்தில் ஒரு 30 கோனாரை போட்டு ஒரு பயணச்சீட்டை எடுத்து ஒரு மணி கழித்து ஒரு பேருந்தில் மற்ற நண்பர்கள் இருக்குமிடம் சேர்ந்தோம். மீண்டும் பனிமலை சறுக்காமல் கிளம்பினோம் அன்றும்.

1 comment:
வாழ்த்துக்கள். சுவீடன் பயண கட்டுரை நன்றாக இருந்தது.
Post a Comment