Saturday, September 24, 2011

வெயில் பட்ட புல்லென வாடும் தலைவி

வெயிலுக்கு புல் வாடுவதும், பின் மழை பொழிய பொலிவு பெறுவதும் இயற்கையே. மழையை பொழிதலை கவிஞர்கள் காதல் மற்றும் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு ஒப்பிடுவதும் அதற்கு உண்டான சூழலாக வர்ணிப்பதும் அந்த நாளில் இந்த நாள் வரை தொடர்கின்றது.


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?


வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

-Chennai library

திருந்திழாய்! என்ன அழகான விளித்தல் இது. இந்த பாடல் பொழிப்புரை இல்லாமலேயே புரிவது மிக வித்தியாசமன்றோ.

6 comments:

narsim said...

அருமை மின்னல்

Anonymous said...

Good one minnal

உயிரோடை said...

வாங்க நர்சிம்.

வாங்க அனானி

நிலாரசிகன் said...

Its nice,but it has many spelling mistakes..like

பொலிய

[Sorry for English]

உயிரோடை said...

வாங்க நிலாரசிகன். தவறை சுட்டியமைக்கு நன்றி

திருத்திட்டேன். ஆனா திருந்த மாட்டேன்கிறேன். சொந்தமா எழுதினது 4 வரி, அதில் 4க்கு மேல எழுத்துப்பிழை. ம்ம்ம்ம் பார்க்கலாம் எழுத்துப்பிழையை குறைப்பதா எழுதுவதை குறைப்பதா என்று

வேந்தன் அரசு said...

”பொலிவு தோன்ற” என்பதை பொலிய என்று சொல்லியது சரிதான்