Sunday, May 24, 2009

காதல் பனித்துளிகள்

அடர்ந்திருந்த மேகத்தில் இருந்த துளிகள் எல்லாம் புலம்பிக்கொண்டிருந்தன இப்படி சிறைபட்டபடி இருப்பதற்கு, எங்கெங்கோ அலைவதற்கு பிடித்த இடத்தில் கடலிலேயே கிடந்திருக்கலாமென்று. சட்டென அடித்த காற்றில் சிலிர்த்த மேகத்திலிருந்து துளிர்த்தன நீர்துளிகள் துள்ளி குதித்தன மகிழ்ச்சியில். வெளி காற்றின் ஈரம்பட்டு பனி துளிகளாய் உறைந்து போயின, பிறந்திருந்த பனி துளியில் இரண்டு மிக சிறப்பானது. ஒன்றின் மேல் ஒன்றிருக்கு அதீத காதல். கை கோர்த்த படி சுதந்திர காற்றை சுவாத்தபடி பாட்டுகள் பாடிய படி பறந்து திறிந்தன. காதலுற்ற பனிதுளி தன் காதலியின் மேலிருந்த காதலினால் கைபிடித்த படியே பறந்திருந்தது. காதலி பனித்துளிக்கு கை பிடித்திருந்தது சற்றே தன் சுந்திரத்தை இழந்தது போல இருந்தது. விட்டு விட்டு மெல்ல பறந்தது. துடித்து போல காதலன் பனித்துளி ஓடி வந்து மீண்டும் கரம் பிடித்துக் கொண்டது, கை விட்டு விடாதே கண்மணி அடிக்கின்ற காற்றில் இரு வேறு திசையில் பிறிந்து பரந்திடுவோம். அதுவா நீ விரும்புவது என்று கேட்டது. காதலி பனித்துளிக்கும் அந்த காதலும் அக்கரையும் பிடித்து போய் விட மெல்ல மெல்ல மிதந்த படி பூமியை நோக்கி பறந்து வந்தன அவ்விரு துளிகளும்.

ஒரிடத்தில் பறந்த பறவை கூட்டத்தை பார்த்து குதூகலித்தது காதலி பனித்துளி. அந்த பறவை மேல் அமர்வோம் அது போகுமிடமெல்லாம் நாமும் பறப்போம். இப்படியே மிதந்திருந்தால் கொஞ்ச நேரத்தில் பூமியை அடைந்து விடுவோம் அப்புறம் விழுந்த இடத்தில் கிடக்க வேண்டியது தான் மீண்டும் கதிரவன் நம்மை கரைக்கும் வரை அதானாலே மேலும் மேலும் பறந்திடுவோம் என்றது. காதலன் பனித்துளிக்கோ என்ன ஆகுமோ என்ற பயமிருந்தது. காதலி பனித்துளி மீண்டும் கூறியது வாழ்க்கையில் எல்லாம் முயற்சிக்க வேண்டும் பயந்தொடுங்கி இருந்தால் எதையும் அனுபவிக்காமலே பிறந்தோம் அழிந்தோம் என்றாகி விடுவோம் என்றது. காதலன் பனித்துளி சற்றே யோசித்தது. சரி தான் காதலியின் கை பற்றி சுற்றி திரிய அருமையாக தானே இருக்கும் என்ற நினைத்தது. இரண்டும் மெல்ல பறவைக்கு மேலே வந்தன. சரியாக பறவையின் இறகில் விழுந்தன. சற்றே சறுக்கிய காதலனை இறுக பற்றிக் கொண்டது காதலி பனித்துளி. அப்பாடா விழுந்து இருப்பேன் நல்ல வேளை உயிர் காத்தாய் தோழி என்றது காதலன் பனித்துளி. வெள்ளையாய் சிரிந்தது காதலி பனித்துளி. இரண்டுக்கும் புது அனுபவமது. பறவையில் வேகத்துக்கு தங்களை பழக்கபடுத்தி கொண்டுது. பின் பறவையோடு பறத்தல் அவர்களுக்கு சுவாஸியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நெடுந்தூரம் பயணித்தபின் பறவைக்கு பனித்துளிகள் பாறமாகி போனது. கொஞ்ச நேரத்தில் அவை இருந்த சிறகினை உதிர்த்துவிட்டு பறந்தது. சிறகு மிக வேகமாக பூமியை நோக்கி பறந்திட பனித்துளிகள் பயந்து போயின. என்ன நேருமோ என்ற அச்சத்தில் அடங்கி ஒடுங்கி போயின. வேகமாக கீழிறங்கிய சிறகு ஒரு மரக்கிளையில் தஞ்சமடைந்தது.

பயத்தில் பனித்துளிகள் மேலும் உறைந்து போயின. படபடப்படங்க அதிக நேரமானது. கிளையில் தாலாட்டில் மெல்லிய பூங்காற்றில், மரத்தில் பூத்திருந்த பூக்களை கண்டுகளித்த காதலி பனித்துளிக்கு மீண்டும் உற்சாகம் பிறந்தது. அதற்கு எப்போதும் பயமென்பதே கிடையாது போலும். ஓடிஆடி மகிழ்ந்தது. காதலன் பனித்துளி அதை மெல்ல அதட்டியது. கண்ணே நாம் இருப்பது ஒரு சிறகின் மேல் அதுவும் மரகிளை கவனம் தேவை. கீழே இருப்பது ஆபத்தான தார்சாலை என்றது. காதலி பனித்துளிக்கு கவலையில்லை. மகிழ்ச்சி கண்ணைக் கட்டியது. மேலும் மேலும் குதித்தாடியது. ஒரு சடுக்கில் சிறகை விட்டு வெளியே கீழே விழ தொடங்கியது. பதறிய காதலன் பனித்துளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தானும் குதிக்க எத்தனித்தது. சற்றே அடர்ந்து வீசிய காற்று காதலன் பனித்துளியை திசை மாற்றி பசும் புல்வெளியில் பறத்தியது. காதலி பனித்துளி தார் சாலையில் விழுந்து காதலனை பிரிந்ததை எண்ணி தவித்து போனது. சற்றே தொலைவில் இருந்த புல்வெளியிலிருந்து காதலன் பனித்துளி கண்ணீர் சிந்தியவாறு காதலி பனித்துளியை பார்த்துக் கொண்டு இருந்தது.

மறுநாள் மிக ரட்சத சப்த்தோடு ஒரு வாகனம் வந்தது. தார்சாலை மீதிருந்த பனித்துகள்களை அகற்றியவாறு அந்த வாகனம் சென்று கொண்டு இருந்தது. காதலன் பனித்துளி கண்ணெதிரே நசுங்கி பொசுங்கும் காதலி பனித்துளியை காப்பாற்ற முடியாத நிலையை எண்ணி பெருகிய கண்ணீரில் அந்த புல்வெளி முழுவது கடலானது. கழிவிரக்கம் பெருகி பொங்கிட தன் இனத்தை ஒன்று சேர்த்த பனித்துளி இறுகி பனிப்பாறையாகியது. அதன் மேல் மேலும் பனித்துளிகளை போர்த்தி மற்ற இடம் போலவே ஆக்கியது. அதன் மேல் நடந்த மானிடரை சறுக்கி விழ செய்தது. சறுக்கி ஒவ்வொரு எண்ணிக்கையையும் "உங்கள் வாகனம் வசதிக்காக செல்ல தானே என் காதலி போன்ற எண்ணற்ற பனித்துளிகளை கொன்று குவித்தீர்கள்" என்று பெருங்குரலில் கூவியபடி தன் காதலிக்கு சமர்பித்தது. சாகவரம் பெற்ற பனிப்பாறையாய் அங்கே வாழ்ந்திருந்தது.

11 comments:

cheena (சீனா) said...

நல்லாத்தான் இருக்கு - கருத்து அருமை - கொண்டு செல்லும் விதம் பாராட்டுக்குரியது

சதங்கா (Sathanga) said...

something different. nice :))

chandru / RVC said...

நல்லா இருக்குங்க :)

Ungalranga said...

.. ம்ம்.. அருமை..
இப்படி சொல்லிவிட்டு போக மனமில்லை..

பனித்துளிகளை கொண்டும் ஒரு காதல் கதை...
உங்கள் கற்பனையை கண்டு வியந்தேன்..
இன்னும் எழுதுங்கள்...

anujanya said...

நல்லா இருக்கு. வித்தியாசமான கற்பனை.

அனுஜன்யா

அபி அப்பா said...

கும்மியடிக்கிற மாதிரி எழுதினா கும்மியடிக்கலாம், இதிலே என்ன கும்மி அடிப்பது? நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்கப்பா!

உயிரோடை said...

வாங்க நிஜமாவே நல்லவன் நன்றி

வாங்க சீனா. நன்றி.

வாங்க சதங்கா. நன்றி.

நன்றி ஆர்விசி.

நன்றி ரங்கன்.

அனுஜன்யா நன்றி

வாங்க அபிஅப்பா. கருத்துக்கு நன்றி

பரிசல்காரன் said...

கற்பனையும் நடையும் புதுசு!!!

உயிரோடை said...

வாங்க பரிசல் கருத்துக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

ஸ்வீடன் பனித்துளிதான் இப்படியெல்லாம் பண்ணுதா? :-) ம்ம்ம்.. நல்ல வளமான கற்பனை.

உழவன்

மதன் said...

எல்லாரும் சொன்ன மாதிரி வித்தியாசமான கற்பனை..! :)