Sunday, June 7, 2009

யாதுமான‌வ‌னுக்கு

ரோஜாப் பூக்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பும் சோலையில் அல‌ர்ந்த‌ தென்ற‌ல் விழி த‌ட‌வ‌ விழித்தெழுந்தேன் ஒரு புது காலை பொழுதினில். பொன் வ‌ண்ண‌ம் பூசிய‌ க‌திர‌வ‌ன் சிரித்த‌ப்ப‌டி என்னை பார்த்திருந்த‌து என் வாழ்வின் புது வ‌ர‌வை என‌க்கு அறிவித்த‌ப‌டி. இட‌துக‌ண், இட‌து புஜ‌ம், இட‌து தொடை துடித்து எனக்கான எல்லா சிற‌ந்த‌ ச‌குன‌ங்க‌ளையும் உண‌ர்த்தி சென்ற‌து நீ என்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம். தூர‌த்து சார‌ல் கூட‌ அருகில் வீச‌ க‌ண் குளிர்ந்தேன் உன்னை கண்ட‌ நொடி ஒடியும் போது.

க‌ண்ட‌தும் தோன்ற‌வில்லை நீ என‌க்கென‌ இருக்க‌ பிற‌ந்த‌வ‌ன் என்று. இத‌மான‌ புன்ன‌கை எனை ஈர்த்திருந்த‌து ஆயினும் ம‌ற்ற‌வ‌ரில் ஒருவ‌னாய் தான் தெரிந்தாய் நீ என‌க்கு. விடிய‌லில் தொட‌ங்கி உன்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம் வ‌ரை உண‌ர‌வில்லை வாழ்வின் உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ளை உன்னோடு க‌ழிப்பேன் என்று.

ஒன்றாக‌ உண்ட‌ பொழுதுக‌ள், கூடி பய‌ண‌த்த த‌ருண‌ங்க‌ள், நீ என்னை தூர‌த்திருந்து ர‌சித்திருந்த‌ ச‌மய‌ங்க‌ள் அத்த‌னையும் அழ‌கான‌ நிக‌ழ்வுக‌ள். ஒரு முறை என்னை சீண்டிய‌ சில‌ரை உன் கோப‌ க‌ணையால் சுட்டெரித்தாயே மென்மையான‌ உன‌க்குள்ளா இத்த‌னை கோப‌ம்? என்னை சுற்றி அக்க‌ரை க‌வ‌ச‌மிட்டு இருந்த‌ உன் அசைவுக‌ள் என் நெஞ்ச‌த்து க‌த‌வுகளை மெல்ல‌ மெல்ல‌ த‌ட்டி சென்ற‌ன‌. ஞயாப‌க‌ம் இருக்கின்றதா நாம் சென்று வ‌ந்த‌ கோவிலில் என‌க்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கொத்து மரிக்கொழுந்து உன்னை போல‌ அழ‌கானதாக‌வும் வ‌ச‌னையோடுமிருந்த‌து. நீ அளித்த‌ நெற்றி குங்கும‌ம் இன்றும் நின்று சிரிக்கின்ற‌து.

என்ன‌ பார்க்கின்றாய் என்றால் உன்னை தான், உன் ஒவ்வொரு அசைவையும் ம‌ற்ற‌வ‌ரிட‌த்து நீ செலுத்தும் அக்க‌ரையும், உன் அணுகு முறையையும், தாயென‌ நீ பொழியும் அன்பையும் அணுஅணுவாக‌ ர‌சிக்கின்றேன் என்பாய். உற‌க்க‌ம் வ‌ருகின்ற‌து நீயும் போய் உற‌ங்கென்றால் நீ எப்ப‌டி உற‌ங்கின்றாய் என்று நான் பார்க்க‌வேண்டும் என்பாய் ப‌த்த‌டி தூர‌த்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்த‌ப‌டி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிட‌மெல்லாம் நிறைந்து வ‌ழிகின்றாய் அப்புற‌ம் என்ன‌டா உற‌ங்கும் போது பார்க்க‌ என்றால் அது உன‌க்கு தெரியாத‌டி எவ்வ‌ள‌வு அற்புத‌மான‌ உண‌ர்வென்று, வார்த்தைக‌ளால் விள‌க்க‌ முடியாதென்பாய். ஆனால் ஒரு நாளும் நான் உற‌ங்குவ‌தை பார்த்த‌தில்லை என்ப‌து தானே உன் புல‌ம்ப‌ல் இன்று வ‌ரை. என‌க்கு உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ற‌தும் நீ ப‌த‌றிய‌தும் அளித்த‌ அர‌வ‌ணைப்பில் நான் க‌ண்டேன் இன்னுமொரு தாயாய் நீ என‌க்கு.

உன்னை க‌ட்டிக் கொள்ள‌வா ஒரு க‌ண‌ம் என்ற‌ போது உன்னை விட‌ இறுக்க‌ க‌‌ட்டிக் கொண்ட‌து நான‌ல்ல‌வா? நெற்றியோட‌ நீ இட்ட‌ முத்த‌த்தில் ஆர‌ம்பித்து இன்று வ‌ரை நீ த‌ந்த‌ முத்த‌ங்க‌ள் எண்ணிக்கையில் அட‌ங்க‌வில்லை. உன‌க்கு என்னை பிடிக்குமா என்றால் ம்ம்ம்ம் என்ற‌ப‌டி இத‌ழ் நிறைய‌ முத்த‌ம் த‌ருவாய். இறுக‌ அணைத்திடுவாய். என் எழுத்தை நீ எழுதிய‌து போல‌ ஏந்தி கொள்வாய். இணுக்க‌ம் இணுக்கமாய் விம‌ர்சிப்பாய். தாங்கி கொள்வாய் எப்போதும் என்னை உன்ன‌வ‌ளாக‌. காலை முத‌ல் மாலை வ‌ரை உன் க‌ண் தொடும் தூர‌த்தில் என்னை வைத்திருந்த‌ ப‌ரிவு என்ன‌வென்று நான் சொல்ல‌. எனிந்த‌ இனிமையான‌ ப‌ய‌ணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிட‌ம் வ‌ந்து விட்ட‌து உன‌க்கென‌ நான் என்ன‌ செய்ய‌ நகர்ந்துபோவதை தவிர.

18 comments:

anujanya said...

புனைவா? எப்படி இந்த மாதிரிக் காதல் மொழிகள் கொட்டுகின்றன? மொழி அழகு. அவருக்கு இந்த எழுத்தைக் காண்பியுங்கள். மகிழ்வார். :)

அனுஜன்யா

அபி அப்பா said...

சூப்பர் புனைவு மின்னல்!!!

Unknown said...

செந்தமிழில் ஒரு romantic புனைவு.

Anonymous said...

காதல் வந்தாலே இந்தமாதிரி ஞமஞமங்குமோ?

jokes apart, நல்ல ஃப்ளோல எழுதியிருக்கீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உனக்கென்ன அக்கறை ன்னு கேக்காதீங்க.. அக்கரை என்று அந்த கரையை ஏன் சொல்றீங்க? அக்கறை அந்த கரையில் நிரம்பி வழிவதாலா ? :)

Ungalranga said...

அடடா...
இவ்ளோ ரொமான்டிக்காவ எழுதுவது?

எனக்கு இப்போவே லவ் பண்ணனும் போல இருக்கு...

அவ்வ்வ்வ் :)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி எழுதிக் கொடுத்தீங்கண்ணா எங்க ஆளுகிட்ட காட்டி செட் ஆயிடுவோம்..

www.narsim.in said...

மின்னல் உங்கள் வரிகள் பின்னல்..

ஆரம்ம எழுத்தில் இருஎது கடைசி வார்த்தை வரை கண்கள் அகலா ஃப்ளோ..

மனுநீதி said...

//தூர‌த்து சார‌ல் கூட‌ அருகில் வீச‌ க‌ண் குளிர்ந்தேன் உன்னை கண்ட‌ நொடி ஒடியும் போது.//

இந்த வரிகள் மிக மிக அருமை.

ஆயில்யன் said...

//என்னை சுற்றி அக்க‌ரை க‌வ‌ச‌மிட்டு இருந்த‌ உன் அசைவுக‌ள் என் நெஞ்ச‌த்து க‌த‌வுகளை மெல்ல‌ மெல்ல‌ த‌ட்டி சென்ற‌ன‌//

//உற‌க்க‌ம் வ‌ருகின்ற‌து நீயும் போய் உற‌ங்கென்றால் நீ எப்ப‌டி உற‌ங்கின்றாய் என்று நான் பார்க்க‌வேண்டும் என்பாய் ப‌த்த‌டி தூர‌த்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்த‌ப‌டி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிட‌மெல்லாம் நிறைந்து வ‌ழிகின்றாய்//

//எப்போதும் என்னை உன்ன‌வ‌ளாக‌. காலை முத‌ல் மாலை வ‌ரை உன் க‌ண் தொடும் தூர‌த்தில் என்னை வைத்திருந்த‌ ப‌ரிவு என்ன‌வென்று நான் சொல்ல‌. எனிந்த‌ இனிமையான‌ ப‌ய‌ணித்தில் யாதுமானாய்//

கலக்கல் :)

//நான் சேருமிட‌ம் வ‌ந்து விட்ட‌து உன‌க்கென‌ நான் என்ன‌ செய்ய‌ நகர்ந்துபோவதை தவிர.//
:(((

Sanjai Gandhi said...

ஒரு பின்னூட்டம்
One Comment
:))

"உழவன்" "Uzhavan" said...

//மரிக்கொழுந்து உன்னை போல அழகானதாகவும்//

ஒரு ஆணை மரிக்கொழுந்து என்று வருணித்துள்ளது இதுதான் முதல்முறை என்று எண்ணுகிறேன். ரோஜா, நிலா..... இப்படியெல்லம் இனி சொல்வீர்களா? நல்லாருக்கு :-)

//இனிமையான பயணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிடம் வந்து விட்டது. உனக்கென நான் என்ன செய்ய நகர்ந்துபோவதை தவிர.//

இனிமையான பயணித்தில் நீங்க மட்டும் தனியா இறங்காதீங்க. ரெண்டு பேருமா சேர்ந்து இறங்குங்க. வாழ்த்துக்கள்!

உயிரோடை said...

வாங்க‌ அனுஜ‌ன்யா. க‌ருத்துக்கு ந‌ன்றி.

வருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அபி அப்பா.

வாங்க‌ ர‌விஷ‌ங்க‌ர். க‌ருத்துக்கு ந‌ன்றி.

முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி வ‌ட‌க‌ரை வேல‌ன். மீண்டும் வாங்க‌.

த‌ட்ட‌ச்சு பிழையா அக்க‌ரைக்கும் அக்க‌றையாக‌ சுட்டிய‌ சுட்டி முத்துலெச்சுமி ந‌ன்றிப்பா.

உயிரோடை said...

வாங்க‌ ர‌ங்க‌ன். க‌ருத்துக்கு ந‌ன்றி. காத‌லிங்க‌ காத‌லிங்க‌ ந‌ல்லா காத‌லிங்க‌.

சுரேஷ் இப்ப‌டி ம‌ண்ட‌ப்ப‌த்துல‌ எல்லாம் கேட்டு வாங்க‌ கூடாது. உட்கார்ந்து யோசிங்க‌ க‌ண்டிப்பா இதை விட‌ அச‌த்த‌லா எழுத‌ வைக்கும் உங்க‌ காத‌ல்.

வாங்க‌ நர்சிம். ந‌ன்றி எல்லாம் உங்க‌ புண்ணிய‌த்துல‌ தான்.


முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் நன்றிங்க‌ உள்ள‌த்திலிருந்து. ம்ம் உங்க‌ பேரே அச‌த்த‌ல்ங்க‌.

உயிரோடை said...

வாங்க‌ ஆயில்ய‌ன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் நன்றிங்க‌. மீண்டும் வாங்க‌.

வாங்க‌ ச‌ஞ்ஜ‌ய்காந்தி. ஆனா என்ன‌ பிடிச்ச‌து எது பிடிக்க‌லைன்னு சொல்லி இருக்க‌லாம்.

வாங்க‌ உழ‌வ‌ன். பிடித்த‌வ‌ர்க‌ளை எதோடு ஒப்பிட்டால் என்ன‌? நிலா இதிகாச‌ புராண‌க்க‌தைக‌ள் ப‌டி ஒரு ஆட‌வ‌ன் தான். ரோஜாவிற்கும் ம‌ரிக்கொழுந்துக்கும் ஏது ஆண்/பெண் வித்தியாச‌ம்.

Anonymous said...

The way you had expressed is amazing. There was livelyness in your post Good work keep going.

சதங்கா (Sathanga) said...

//நிலா இதிகாச‌ புராண‌க்க‌தைக‌ள் ப‌டி ஒரு ஆட‌வ‌ன் தான். ரோஜாவிற்கும் ம‌ரிக்கொழுந்துக்கும் ஏது ஆண்/பெண் வித்தியாச‌ம்.//

ம்ம்ம்ம் ... வித்தியாசமா இருக்கே !!!

புனைவும் அருமை !

நிலாரசிகன் said...

புனைவு அருமை.