Saturday, January 24, 2004

மழை மேக‌ம் துளி க‌ண்ணீர்

ஐந்திணை ஐம்ப‌தில் ஒரு பாட‌ல்.

கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்
கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
துளி கலந்து வீழ்தரும், கண். 5


கோடு - சிகரம்
கொண்மூ - மேகம்
வளி - காற்று

என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.

ந‌ன்றி சென்னை லைப்ர‌ரி


ம்ம்ம்ம் த‌லைவிக்கு மேக‌ம் கூடுத‌லை க‌ண்டு க‌ண்ணீர் வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌வாக இருக்கும்? :)

கூடலோ கூடிய‌தோ ஞாப‌க‌ம் வ‌ந்திருக்குமோ?(ம‌ழையை புண‌ர்ச்சியின் குறியீடாக‌ பார்ப்ப‌து தானே க‌விஞ‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌ம்)

என‌க்கு இங்கே அவ‌னை ப‌ற்றிய‌ இவ்வ‌ள‌வு உண‌ர்வுக‌ள் அங்கே அவ‌னுக்கு இருக்குமோ என்ற‌ ச‌ந்தேக‌ம், வேத‌னையோ?

சென்ற‌ கார்கால‌த்தில் மோக‌ம் கொண்டோம், இப்போது நான் ம‌ட்டும் ம‌ழை மேக‌ம் க‌ண்டு க‌ண்ணீர் சிந்திய‌வாறென்றா

2 comments:

சென்ஷி said...

தலைப்பு ரொம்ப அருமையா இருக்குதுங்க..

உயிரோடை said...

த‌லைப்பு ம‌ட்டும் தானுங்க‌ளா. முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி சென்ஷி. மீண்டும் வ‌ருக‌