Friday, September 24, 2010

அமில‌ம் தோய்தெரிந்த‌‌ நினைவுக‌ள்



ப‌க‌ல்கொள்ளைகார‌னிட‌ம்
காட் பிர‌மிஸ் கேட்கும்
சிறுமியின் அறியாமையோடு
தானிருந்த‌து என்
சகோத‌ர‌த்துவ‌ம் உன்னுட‌ன்

மெல்ல அதிர்ந்தேன்
முன்பொருமுறை
மேலும் அதிர்ந்தேன்
ப‌ல‌முறை சில‌முறை

இன்று தான் புரிகின்ற‌து
நான் என்றுமே அதிர‌வில்லை
இது தெரியும் வ‌ரை
போக‌ட்டும்

உண்மையும் பிரிய‌மும்
எங்கானும் ஒரு ஓர‌த்தில்
ஒளிந்திருக்கிற‌தா
தேடிப்பார்கிறேன்

பையெங்கும்
அமில‌ம் தோய்த்த‌த்
தெரிந்த‌ அம்பென‌
கையெங்கும் மிஞ்சிய‌து
நினைவுக‌ள்

8 comments:

Unknown said...

//ப‌க‌ல்கொள்ளைகார‌னிட‌ம்
காட் பிர‌மிஸ் கேட்கும்
சிறுமி//

அருமை

Unknown said...

:)

ம்,போட்டுருக்குற படமும் nalla iruku.

ஹேமா said...

எனக்குள்ளும் இந்த அதிர்வும் இப்போ தெளிவும் உணர்ந்திருக்கிறேன்.

Unknown said...

கவிதை நன்றாக இருந்தது . கொஞ்சம் யோசனை செய்து புரிந்து கொண்டேன் . சிறுமின் என்ற வார்த்தை சிறுமியின் என இருக்க வேண்டுமென்பது எனது எண்ணம் என்ற வார்த்தை

காமராஜ் said...

இதை விட வேறென்ன அதிர்ச்சிவேண்டும்.
காட்பிரமிஸ் சிறுமி தன் அகல விரித்த கண்களோடு
ரொம்பநாளைக்கு முகத்துக்கு நேரே கைநீட்டிக்கொண்டே இருப்பாள்.
க்ளாஸ் லாவண்யா.

அகநாழிகை said...

அருமை

bogan said...

கிரேட்.ஆனால் அமிலம் 'தோய்தெரிந்த' என்ற சொல் புரியவில்லை.தோய்த்து எறிந்த என்ற பொருளில் சொல்கிறீர்களா..

உயிரோடை said...

வாங்க கலாநேசன். நன்றி.

வாங்க ஆறுமுகம் முருகேசன் நன்றி.

வாங்க ஹேமா நன்றி.

வாங்க ஆசிரியர். சுரா.சுந்தரி. நன்றி.

வாங்க காமராஜ். நன்றி.

வாங்க அகநாழிகை. நன்றி.

வாங்க போகன். நன்றி.