மறுநாள் சென்னை நண்பர் கிளம்புவதாக இருந்தது. அனைவரும் அவர் அறையில் கூடினோம் ஒன்றாக உணவருந்தி, உங்கள் இந்தியா அலைபேசி எண் என்ன? மடல் முகவரி என்று வினவல்கள், இனிய பயண வாழ்த்துகள் இத்தியாதி இத்தியாசி எல்லா சம்பாஷணையும் நடந்தேறியது. அவரை பிரிந்தது மிக வருத்தமாக இருந்தது. நாங்கள் ஐவர் நால்வரானோம். அவர் அறையை கடக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு.
அதன் அடுத்த வார இறுதிக்குள் எங்கள் குழுவில் மேலும் நால்வர் வந்து சேர்ந்தனர். அதில் மூவர் தமிழர். என் உலகம் மாறியது. தமிழ் பேச்சு, பாட்டு என்று சுவீடனுள் ஒரு புது உலகத்தில் இருந்தேன். கிட்டத்தட்ட இந்தியாவை விட்டு வெகு தூரத்தில் இருக்கின்றோம் என்ற உணர்வே இல்லை எனக்கு. நால்வர் எண்வரானோம். வாழ்க்கையின் மினி தத்துவத்தை உணர்ந்தேன் ஒருவர் போவார் இன்னும் பலர் வருவார் இது தானே வாழ்க்கை.
அந்த வார இறுதியில் பனி பொலிவு மிக அதிகமாக இருந்தது. கணுக்கால் வரை கால் புதையும் வரை பனியின் அடர்த்தி இருந்தது. மிக வித்தியாசமான சாலையில் கூட பனி மூடி இருந்தது. தொடர்ந்து பனி பொழிந்து கொண்டு இருந்தது. வெளியில் கிளம்பினோம். பனித்துளிகள் தலையில் வந்து தங்க தங்க அதை விலக்கியவாறு நடந்தோம். முகத்தில் வந்து போதும் மென்மையான பனி ரம்யமாக இருந்தது. மழை போலில்லை பனிப் பொலிவு. ஆடை நனையும் என்ற அய்யமில்லை. பனியில் நனைந்தாலும் குளிர்வதில்லை. அது ஒரு ஆனந்த நிலை. வெளியே கிளம்பி வந்ததும் எங்கள் விடுதிக்கு முன் இருக்கும் மேட்டில் வழக்கம் போல் சிறுவர் சிறுமியர் சரக்கி விளையாடிக் கொண்டு இருந்தார். ஒரு படகை நானும் வாங்கி சரக்கினேன். அங்கே ஒரு பனி பொம்மை செய்து வைத்திருந்தார்கள். நம் ஊர் சோலைக்கொலை பொம்மை போல. அழக்காக இருந்தது அந்த பொம்மை.
புதிதாக வந்தவர்களை வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்து டிசென்ரல் சென்று பனிசரக்கு இடம் செல்ல முடிவாயிற்று. புதியவர் யாரும் பயமின்றி உடனே சரி என்று சொன்னது வித்தியாசமாக இருந்தது. நானும் சரக்கு காலணி அணிய வேண்டியாற்று, இந்த முறை போன முறை போல அல்லாது கொஞ்சம் எளிதாக இருந்தது. ஆனால் பனி பொலிவின் காரணமாக பாதையே கூட சருக்கக்கிய படி இருந்தது. களத்தில் இருங்கவே ஒரு மணி நேரம் ஆகியது.
நான்கு முறையாவது சுற்றி வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றரை சுற்று தான் சுற்ற முடிந்தது. அதற்க்குள் தயவு செய்து உங்கள் காலணிகளை திருப்பி தரவும் என்று சுவிடிஷில் அறிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுவரை ஒழுங்காக நடந்த நான் சற்று வேகமாக நடக்க முயன்று, முடிக்கும் நேரத்தில் விழுந்தேன். விழுத்தால் தான் எழுவது சிரமாயிற்றே. திரும்பி பார்த்தால் எங்கள் குழுவில் ஒரு நண்பர் ஓடி வந்து கொண்டு இருந்தார் எனக்கு கைக்கொடுக்க, நெகிழ்த்தேன். மற்ற நண்பர்களும் வந்து என்னை வேகமாக இழுத்து செல்வதாக விளையாட்டிக்கு இழுத்து விழ வைத்தார்கள் மீண்டும். :(

2 comments:
//கணுக்கால் வரை கால் புதையும் வரை பனியின் அடர்த்தி இருந்தது. மிக வித்தியாசமான சாலையில் கூட பனி மூடி இருந்தது. தொடர்ந்து பனி பொழிந்து கொண்டு இருந்தது.//
நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..
கலக்கல்.
நன்றி நர்சிம்
Post a Comment