ஒருவழியாக சுவீடனில் இருந்து கிளம்பும் நாள் நெருங்கியது. முதல் நாள் சாயுங்காலம் ஒரு டெனிக்கல் முஸியம் சென்றோம். அங்கே ஒரு 4டி சோ பார்த்தோம். பம்பாயில் பார்த்ததை போல தான் கன்செப் மட்டும் தான் வேறு. ஆனால் நன்றாக இருந்தது. அதே போல் முதுகில் அடிக்கும் சேர்கள், முகத்தில் பனி அடிக்கும் ஏதோ. ஒன்றே ஒன்று மட்டும் வித்தியாசம் திரையில் எலி கடிக்கும் போது இறுக்கையை கடிப்பது போல இருந்தது. ஏனோ சிரிப்பு வந்தது. என்னை போலவே எல்லோரும் சிரித்தனர். ஒரு வினாடி வினா நடந்தது. எங்கள் குழுமத்தை சேர்ந்த ஒருவர் முதல் மதிப்பெண் பெற்றார்.அந்த முஸியத்தில் எல்லா விதமான கார்கள், ரயில்கள், கப்பல், விமானம், தொலைபேசிகள் இன்னும் பலவென்று நிறைய இருந்தது. இந்திய இசையாக தமிழ் பாடல்கள் ஒலித்தது. நான் கேட்ட போது ராசா கைய வைச்சா ஒலித்துக் கொண்டு இருந்தது. அதற்கு முதல் பாடலும் தமிழ் தானாம். கேட்ட நண்பர்கள் சொன்னார்கள்.
மறுநாள் கிளம்ப வேண்டும். என் அறையில் இருந்த சமையல் பொருட்களை எல்லாம் எதிர் அறைக்கு மாற்றிவிட்டு, என் இந்திய அலைபேசியையும், மடல் முகவரியையும் கொடுத்து, மனம் தொடும் வார்த்தைகள் பேசி பிரிய ஆயத்தம் ஆனேன். மறுநாள் ஒரு நண்பர் வந்து வழி அனுப்பினார். விழியில் துளிர்ந்த ஒரு துளி கண்ணீர் பரிசாக்கினேன் அவர்கள் பாசத்திற்கு. செல்லும் வழி எங்கும் வெள்ளை பனியையும், அதே பனி போல தூய நட்பையும் பாசத்தையும் பொழிந்த நண்பர்களையும் இனி எப்போது பார்ப்பேன் என்று நினைத்தபடி ஸ்டாக்ஹோமிலிருந்து ஹெல்சிங்கி வந்து அங்கிருந்து டில்லி அடைந்தேன்.
ப்ரிபெய்ட் டாக்ஸியை கேட்டேன் 700 மேல் ஆகும் என்றார்கள் வீடு வரை விட, கையில் முன்னூறு இந்திய ரூபாய்களும், சில அமெரிக்க டாலர்களுமே இருந்தது. ப்ரிபெய்ட் டாக்ஸி மேனேசரிடம் காக்கா பிரியாணி சாப்பிட்டு அக்வோ பீனா கேட்கும் ரன் விவேக் போல டாலர் வாங்கிபீங்களா, கார்ட் அக்செப்ட் பண்ணுவீங்களா என்றேன். அவர் பார்த்த பார்வை பார்த்து நன்றி சார் என்று சொல்லி 20 டாலரை மாற்றினேன் ஸ்சேன்ஞ் சார்ஞ் 100 ரூபாய் வாங்கி விட்டார்கள். ஒரு வழியாக வீடு வந்து. தண்ணி இல்லை, கரண்ட் இல்லை, இன்டர்நெட் இல்லை என்று எல்லா இல்லைக்கும் அவரை திட்டி தீர்த்து, தமிழ் இசை அலைவரிசைகளை கேட்க ஆரம்பித்ததும் தான் நான் இந்தியாவில் இருப்பது போல எண்ணம் வந்தது. வீட்டு தோட்டத்து மல்லிகை மலர்களையும் ரோஜாவையும் கண்டதும் உள்ளம் நிறைந்தது. வீட்டு வேலைக்காரி தீதீ ஆகேயே கேயா. ஆப் நகித்தே ஹம் பரிசான் கோஹையேன் என்ற பாசத்தில் நெகிழ்ந்து போனேன். எப்படியோ இரண்டு மாதமாக கைபேசி இல்லாமல், தொலைக்காட்சி இல்லாமல், கனமான ஜாக்கெட் இப்படி இருந்தது மிக வித்தியாசமாக இருந்தது.

5 comments:
வயித்தெரிச்ச்லை கிளப்பறதும் இல்லாம ஓ போடனுமாம்..ஓ.. :(
2 மாசம் எப்டி ஜாலியா இருந்திருக்காங்க பாருங்க.. மக்களே இதுக்கு எல்லாம் சேர்ந்து இங்க வேலை இருக்கனும்னு வேண்டிக்கோங்க.. :))
\\
எப்படியோ இரண்டு மாதமாக கைபேசி இல்லாமல், தொலைக்காட்சி இல்லாமல், கனமான ஜாக்கெட் இப்படி இருந்தது மிக வித்தியாசமாக இருந்தது.
\\
பயணங்களில் இதுவும் ஒரு புது அனுபவம்...
இத்தையெல்லாம் பயணக் கட்டுரையா சங்கம் ஒத்துக்காது..படம் ஒன்னுமே இல்லியே.. :(
இதுக்கு ஓ வேற போடனுமாமே? அவ்வ்வ்வ்வ்
49 ஓ
வாங்க சஞ்சய் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க தமிழன் கருப்பி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க தமிழ் பிரியன் படங்கள் நான் எடுக்கலை. நண்பர்களிடம் கேட்டு வாங்கி போடலாம். செய்யறேன்.
வாங்க சிபி
அல்லாரும் மீண்டும் மீண்டும் வாங்க
Post a Comment