Wednesday, June 24, 2009

அம்மாவுக்கு

"நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா"

அட கொடுமையே இந்த பாட்டையுமா ரிமிக்ஸ் பண்ணீட்டாங்க. நல்லவேளை சிவாஜி, பத்மினி இரண்டு பேருமே போய் சேர்ந்துட்டாங்க. இல்லாட்டி இந்த பாட்டை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று தோன்றியது. அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு நாதஸ்வரம் என்றால் ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் கேட்கும் எல்லா நாதஸ்வர இசையும் ஒன்று போலத் தான் தெரியும் எனக்கு ஆனால் அம்மா அது என்ன பாடல் அது என்ன ராகம் எல்லாம் சொல்வார்கள். நகுமோமோ அவர்களுக்கு மிக பிடித்தமான பாடல். அம்மா ரொம்ப சார்ப். எந்த விசயம் என்றாலும் உடனடியாக கற்று கொள்வார்கள் அம்மாவிற்கு தெரியாத விசயமே கிடையாதோ என்று தோன்றும்.

தொலைபேசியில் அழைத்தேன். அம்மா ஹலோ சொல்லும் விதமே அழகாய் இருக்கும்.

"ஹலோஓஒ"

"ஹலோ அம்மா எப்படி இருக்கீங்க"

"நான் நல்லா இருக்கேன்ம்மா நீ எப்படி இருக்கே"

"நல்லா இருக்கேன்ம்மா சும்மா பேசலாம்ன்னு போன் பண்ணேன். உடம்பெல்லாம் நல்லா இருக்கா கால் வலி இருக்கா?"

"ம்ம் உடம்பெல்லாம் நல்லா இருக்கும்மா கால் வலி பரவாயில்லை அடுத்த வாரம் டாக்டரிடம் போகனும்"

"காலையில் என்ன சாப்பிட்டீங்க?"

"தட்டபயிரு துவையல் அரைச்சி சோறு பொங்கினேன் நீ என்ன செய்தே"

"நேத்து ரசம் இருந்துச்சி, அதோட வெண்டைக்காய் வறுத்து, கொடமுளக காயும் செய்து சாப்பாடு வைச்சி இருக்கேன்"

"கொடமுகளாவா நான் இதுவரை செய்தது இல்லை எப்படி செய்யறது?"

"ரொம்ப ஈசி தான்ம்மா பச்சைமிளகாய்,வெங்காயம்,தக்காளி எல்லாம் லைட்டா வதக்கிட்டு, கொடமிளகாயையும் வதக்கிட்டு உப்பு,சாப்பார் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு வேக வைக்கணும் அவ்வளவு தான் 10 நிமிசத்துல செய்துடலாம்"

"சாப்பாட்டோட கலந்து சாப்பிடலாமா?"

"ம்ம் சாப்பாட்டோடயும் சாப்பிடலாம், சப்பாத்தியோடும் சாப்பிடலாம்"

"சரி செய்து பார்க்கறேன். வேறென்ன விசயம் சொல்லும்மா"

"வேறொன்னுமில்லம்மா உடம்பை பார்த்துக்கோங்க எதாவது விசயம்ன்னா போன் பண்ணுங்க"

"சரிம்மா வைக்கிறேன்."

எனக்கு பழைய நாட்கள் ஞாபகம் வந்தது. தினம் திட்டு விழும். காலையில இவ்வளவு நேரம் தூங்கற, ஒருவேலையும் உருப்படியா பண்ண தெரியலை. ஒருநாளாவது வந்து சமையல் செய்ய துப்பில்லை. எங்கே போய் என் பேரை கெடுக்க இருக்கியோ. என்ன வளர்ப்பு வளர்த்திருக்கான்னு என்னைதான்டி சொல்லுவாங்க.... இப்படி தினம் ஒரு முறையாவது அர்ச்சனை கிடைக்காத நாளே இருக்காது. இன்று சமையலில் டிப்ஸ் அவர்களுக்கே தருவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது. இன்று இருக்குமிடத்தில் எவ்வளவு மரியாதை எனக்கு. ஏகப்பட்ட நல்லபேர். அம்மா எல்லாம் நீங்கள் கற்று தந்தது தான் அம்மா. உங்கள் நல்ல குணத்தில் 10% தான் என்னிடம் உண்டு அதற்கே இவ்வளவு நல்ல பெயர் எனக்கு.

I LOVE YOU அம்மா. உங்களை போல உலகில் யாருமே இல்லைம்மா.

16 comments:

Ungalranga said...

நல்ல பதிவு..

//எனக்கு பழைய நாட்கள் நியாபகம் வந்தது. தினம் திட்டு விழும். காலையில இவ்வளவு நேரம் தூங்கற, ஒருவேளையும் உருப்படியா பண்ண தெரியலை. ஒருநாளாவது வந்து சமையல் செய்ய துப்பில்லை. எங்கே போய் என் பேரை கெடுக்க இருக்கியோ. என்ன வளர்ப்பு வளர்த்திருக்கான்னு என்னைதாண்டி சொல்லுவாங்க.... இப்படி தினம் ஒரு முறையாவது அர்ச்சனை கிடைக்காத நாளே இருக்காது.//

நீங்கதான் தெய்வமாச்சே அப்புறம் அர்ச்சனை இல்லாட்டி எப்படி.. ?!
கிகிகி...

உங்க பாசம் டச்சிங்..

ஜோசப் பால்ராஜ் said...

அருமையானப் பதிவு.
எனக்கு எங்கம்மா நினைப்பு வந்துருச்சு.
எங்கம்மாவுக்கு போன் பண்றதுல என்ன பிரச்சனையின்னா, போன் பண்ணாலும் அழுவாங்க, போன் பண்ணலனாலும் அழுவாங்க. அம்புட்டு பாசம் புள்ள மேல.

ஜோசப் பால்ராஜ் said...

//இன்று இருக்குமிடத்தில் எவ்வளவு மரியாதை எனக்கு. //

இதுக்கு ஆதரம் தேவை அப்டின்னு உங்க கிட்ட கேட்க சொல்லி ரெங்கா எனக்கு மெயில் அனுப்சான்.

ஜோசப் பால்ராஜ் said...

2 இன் 1 பதிவா அம்மாவப் பத்தி எழுதுனதுலயே ஒரு சமையல் குறிப்பும் எழுதிட்டீங்க. கலக்கல் போங்க.
( யாராச்சும் நீங்க சொன்னத செஞ்சு சாப்டாலும் கலக்கல் தான்னு ரெங்க செல்லுவான், நம்பாதீங்க)

ஆ.ஞானசேகரன் said...

//I LOVE YOU அம்மா. உங்களை போல உலகில் யாருமே இல்லைம்மா.//

நன்றாக இருக்கு

Ungalranga said...

//( யாராச்சும் நீங்க சொன்னத செஞ்சு சாப்டாலும் கலக்கல் தான்னு ரெங்க செல்லுவான், நம்பாதீங்க)//

என்னைய வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே..

மின்னலக்காட்ட சொல்லி கரண்ட் ஷாக் குடுக்க சொல்லிடுவேன் ஜாக்கிரதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) உண்மைதான் அப்ப அவங்க சின்னப்பிள்ளையா நினைச்சு சொல்லிக்குடுத்ததும் நன்மைக்குத்தான்..இப்ப பெரியவங்களா சமமா மதிச்சு கேட்டுக்கிறதும் நல்லாத்தான் இருக்குது..

காயத்ரி சித்தார்த் said...

// அம்மா எல்லாம் நீங்கள் கற்று தந்தது தான் அம்மா. உங்கள் நல்ல குணத்தில் 10% தான் என்னிடம் உண்டு அதற்கே இவ்வளவு நல்ல பெயர் எனக்கு.

I LOVE YOU அம்மா. உங்களை போல உலகில் யாருமே இல்லைம்மா.//

அம்மாவை விட்டு குவைத் வந்து 2 மாதங்களாகப் போகிறது. நானும் இதே நிலையில் தான் இருக்கிறேன். இன்று என் அம்மாவின் பிறந்தநாள்.. இத்தனை வருடங்களில் நான் அம்மாவின் அருகில் இருக்க முடியாமல் போன முதல் பிறந்தநாள்.. படிக்கப் படிக்க கண்கள் நிறைந்து வார்த்தைகள் மறைந்து போயின. எதிர்பாராத பதிவு.

உயிரோடை said...

நன்றி ரங்கா.

வாங்க ஜோசப் பால்ராஜ் கருத்துக்கு நன்றி.

வாங்க ஞான சேகரன் கருத்துக்கு நன்றி.

வாங்க முத்துலெச்சுமி கருத்துக்கு நன்றி.

வாங்க காயத்ரி. நெகழ்வான கருத்து. நன்றி

மங்களூர் சிவா said...

அருமையானப் பதிவு.
எனக்கும் எங்கம்மா நினைப்பு வந்துருச்சு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க மின்னல்!

வெண்பூ said...

அருமையான அழகான பதிவு.. அம்மா என்ற உறவைப் போலவே..

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

உயிரோடை said...

வாங்க மங்களூர் சிவா. கருத்துக்கு நன்றி. மீண்டும் வாங்க

வாங்க ஜ்யோவ்ராம் சுந்தர். கருத்துக்கு நன்றி மீண்டும் மீண்டும் வாங்க.

வாங்க வெண்பூ கருத்துக்கு நன்றி. மீண்டும் வாங்க.

வாங்க விக்னேஷ்வரன். நன்றி. மீண்டும் வருக

narsim said...

யம்மா யம்மா யம்ம்மான்ற பாட்ட கேட்டாலும் அவங்க ஞாபகம் வந்திருக்கும் போல..அம்மா பாசத்துல அந்த ரீமிக்ஸ போட்டு கலாய்ச்சுட்டீங்களே மின்னல்..

அம்மா. மூன்றெழுத்தில் உலகம்

உயிரோடை said...

வாங்க‌ ந‌ர்சிம் க‌ருத்துக்கு ந‌ன்றி